வேறவெவல் லுக்கில் நாட்டாமை!.. பொறந்த நாளுக்கு வெளியானது புது போஸ்டர்!...

Kombu seevi: தமிழ் சினிமாவில் பல படங்களிலும் நடித்தவர் சரத்குமார். துவக்கத்தில் வில்லனாக பல படங்களிலும் நடித்தார். அதன்பின் ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறினார். குறிப்பாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரவிக்குமார் நடித்த எல்லா படங்களுமே அவருக்கு வெற்றிப்படங்களாக அமைந்தது.
சேரன் பாண்டியன் இதற்கு துவக்கப்புள்ளியாக அமைந்தது. அதன்பின் சில வருடங்கள் கழித்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சர்த்குமார் நடித்து வெளியான நாட்டாமை திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. ரவிக்குமாரின் பெரும்பாலான படங்களில் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அது எல்லாமே அவருக்கு வெற்றிப்படங்களாக அமைந்தது. அரண்மனை காவலன், சூரியன், நாட்டாமை, நட்புக்காக போன்ற படங்கள் சரத்குமாருக்கு முக்கிய படங்களாக இருந்தது.
அதேபோல், விக்ரமன் இயக்கத்தில் நடித்த சூர்யவம்சம் படம் தமிழ் சினிமாவில் அதிகம் பேர் பார்த்த படம் என்கிற பெருமையை பெற்றது. இப்போது டிவியில் போட்டாலும் இப்படத்திற்கு நல்ல டி.ஆர்.பி கிடைக்கிறது. சூப்பர் ஹிட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது.

கடந்த சில வருடங்களாகவே சரத்குமார் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். வாரிசு படத்தில் கூட விஜய்க்கு அப்பாவாக நடித்திருந்தார். சமீபத்தில் கூட 3BHK படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. ஒருபக்கம் இப்போதும் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
அதேபோல், பொன் ராம் இயக்கத்தில் கொம்பு சீவி என்கிற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்க அவரின் அப்பாவாக சரத்குமார் நடித்திருக்கிறார். இந்நிலையில், இன்று சரத்குமாரின் பிறந்தநாள் என்பதால் இன்று கொம்பு சீவி படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டிருக்கிறது.