சரத்குமார் மிஸ் பண்ணின சூப்பர்ஹிட் படங்கள்... அட இவ்ளோ இருக்கா...?

by Sankaran |   ( Updated:2024-12-28 13:00:11  )
sarathkumar
X

தமிழ்சினிமாவில் சிறந்த நடிகர்களுள் ஒருவர் சரத்குமார். இவரை சுப்ரீம் ஸ்டார்னும் சொல்வாங்க. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தின்னு பிற மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார். 150 படங்கள் வரை நடித்துள்ளார்.

அவரது 150வது படம்தான் தற்போது வெளிவந்து ஓடிக் கொண்டு இருக்கும் தி ஸ்மைல் மேன். சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். சூரியன், நாட்டாமை, சூர்யவம்சம், தென்காசிப் பட்டணம் உள்பட பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் நடிக்க முடியாமல் மிஸ் பண்ணின படங்களைப் பார்ப்போம்.

ஜென்டில்மேன்

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்த படம் ஜென்டில்மேன். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இந்தப் படத்தை முதலில் சரத்குமாரிடம் தான் ஷங்கர் சொன்னார். அதே நேரம் அவர் பல படங்களில் நடித்துக் கொண்டு இருந்ததால் அவரால் இந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது.

ரோஜாவை கிள்ளாதே

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1993ல் அர்ஜூன் நடிப்பில் வெளியான படம் ரோஜாவை கிள்ளாதே. குஷ்பூ ஜோடியாக நடித்துள்ளார். தேவா இசை அமைத்துள்ளார். இந்தப் படமும் சரத்குமாருக்குத் தான் போனது. ஆனால் கால்ஷீட் பிராப்ளம் இருந்ததால அவரால பண்ண முடியாமல் போனது.

தாயகம்

ஏ.ஆர்.ரமேஷ் இயக்கத்தில் 1996ல் வெளியான விஜயகாந்த் படம் தாயகம். இது ஒரு சூப்பர்ஹிட் படம். விஜயகாந்துடன் அருண்பாண்டியன், நெப்போலியன், ரஞ்சிதா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இயக்குனர் அருண்பாண்டியன் கேரக்டருக்கு இயக்குனர் சரத்குமாரிடம்தான் கதை சொன்னாராம். ஆனா இந்த ரோல் பிடிக்காம சரத்குமார் நோ சொல்லி மறுத்து விட்டாராம்.

கண்ணுபட போகுதய்யா

பாரதிகணேஷ் இயக்கத்தில் 1993ல் வெளியான படம் கண்ணுபட போகுதய்யா. விஜயகாந்த், சிம்ரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதுல விஜயகாந்துக்கு இரட்டை வேடம். எஸ்;.ஏ.ராஜ்குமார் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்துக்கு முதலில் இயக்குனர், சரத்குமாரிடம் தான் கதையை சொன்னாராம். ஆனால் கால்ஷீட் பிரச்சனையால இந்தப் படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனதாம். இது ஒரு சூப்பர்ஹிட் படம்.

வானத்தைப்போல


விக்ரமன் இயக்கத்தில் 2000ல் வெளியான சூப்பர்ஹிட் படம் வானத்தைப் போல. விஜயகாந்த், பிரபுதேவா, மீனா, லிவிங்ஸ்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர். எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்துக்கு முதலில் சரத்குமாரை மனதில் வைத்துத்தான் விக்ரமன் கதை எழுதினாராம். ஆனா அவர் கதையை விஜயகாந்திடம் சொல்ல ஓகே ஆனதாம்.

Next Story