சசிகுமாரின் அடுத்த படத்தில் இணைந்த 90ஸ் கனவுகன்னி… ஒன்ஸ் மோர் கேட்கலாமா?

Sasikumar: நடிகர் சசிகுமார் நடிப்பில் அடுத்து உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருக்கும் நடிகை குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

2008ம் ஆண்டு தமிழ் சினிமாவில் சுப்ரமணியபுரம் படத்தினை இயக்கி நடித்தவர் சசிகுமார். முதல் படமே மிகப்பெரிய அளவில் சூப்பர்ஹிட் வெற்றியை பெற்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை இயக்குவது மட்டுமல்லாமல் நடிப்பிலும் ஆர்வம் காட்டி வந்தார்.

கிராமத்து கதையை மையமாக வைத்து இவர் உருவாக்கிய எல்லா படங்களுமே சூப்பர்ஹிட் படமாக தான் அமைந்தது. அந்த வகையில் தொடர்ச்சியாக நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் அவர் நடிப்பில் கடைசியாக வெளியான அயோத்தி, கருடன், நந்தன் படங்கள் நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது.

இந்நிலையில் மீண்டும் ஒரு குடும்ப கதையில் சசிகுமார் நடிக்க இருக்க அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குட் நைட் மற்றும் லவர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர்ஸ் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது.


அபிஷன் ஜீவந்த் இயக்க இருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Related Articles
Next Story
Share it