சசிகுமார் சொல்லியும் கேட்காத சிவகார்த்திகேயன்! அடுத்த தளபதி ஆக வேணாமா?
Sasikumar: பெரிய பெரிய கல்லூரிகளில் சமீபகாலமாக பெரிய நடிகர்களின் படங்களின் இசை வெளியீட்டு விழா நடத்தப்படுவது வழக்கமாகிவிட்டது. ஏனெனில் பொது இடங்களில் அப்படி ஒரு இசை வெளியீட்டு விழாவை நடத்தும் போது மக்களின் வருகை குறைந்து வருவதால் கூட்டத்தை காண்பிப்பதற்காகவே பெரிய பெரிய பிரபலம் வாய்ந்த கல்லூரிகளில் இப்போது படத்தின் இசை வெளியீட்டு விழாக்களை நடத்தி வருகிறார்கள்.
கல்லூரி எனும் போது ஒட்டுமொத்த மாணவர்களின் கூட்டத்தையும் காட்டி இந்த நடிகருக்காக எவ்வளவு கூட்டம் கூடுகிறது என்பதை மக்கள் அதிசயத்து பார்க்க வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு எண்ணத்தில் கல்லூரிகளில் இசை வெளியீட்டு விழாக்கள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் இதைப் பற்றி சசிகுமாரிடம் ஒருமுறை தொகுப்பாளர் ஒருவர் பெரிய பெரிய நடிகர்கள் கல்லூரிகளிலும் நேரு ஸ்டேடியங்களிலும் படங்களில் இசை வெளியீட்டு விழாக்களை நடத்துகிறார்களே?
ஏன் நீங்களும் அவ்வாறு செய்யலாமே என்ற ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு சசிகுமார் என் படத்திற்கு கூட்டம் கூட வேண்டும் என்பதற்காக கல்லூரிகளில் நடத்த வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் கிடையாது. அப்படி கல்லூரிகளில் நடத்தும் பொழுது இந்த கல்லூரி என்பது அவர்களின் படிப்புக்கான ஒரு அங்கம். அதில் என்னுடைய படத்தை காட்டி கூட்டத்தை கூட்டணும் அப்படிங்கிறது அவசியம் இல்லை.
அது அவர்களின் எதிர்காலத்தை கெடுக்கும் என்ற நோக்கத்திற்காகவே நான் கல்லூரியில் நடத்த விரும்பவில்லை என்பதைப் போல் பதில் அளித்து இருந்தார் . இவர் பேசிய இந்த வீடியோவை டேக் செய்து பல பேர் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் மதராஸி படத்தின் இசை வெளியீட்டு விழா ஒரு பிரபலமான கல்லூரியில் நடந்தது. சசிகுமார் சொன்னதைக் கூட சிவகார்த்திகேயன் காதில் வாங்கவில்லையே? அவருக்கு கூடிய சீக்கிரம் அடுத்த தளபதி ஆக வேண்டும் என்று தான் எண்ணம்.
மாணவர்களின் நலனில் அக்கறை இல்லை என்பதைப் போல கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர். இது சிவகார்த்திகேயன் மட்டுமல்ல பெரிய பெரிய நடிகர்கள் கல்லூரிகளில் தான் தங்களுடைய பட இசை வெளியீட்டு விழாக்களை நடத்தி வருகின்றனர். ஆனால் சமீபத்தில் பெரிய நடிகரின் படம் என்றால் அது சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தான். அதனாலேயே ரசிகர்கள் மதராஸி திரைப்படத்தையும் சசிகுமார் சொன்ன அந்த கருத்தையும் ஒப்பிட்டு இப்படி ஒரு செய்தியை பரப்பி வருகின்றனர்.
