சசிக்குமாரோட ஆசானுக்கு இன்னைக்கு பிறந்த நாள்... யாருன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர் சசிக்குமார். இவர் இயக்குனர் பாலா, அமீர் என பெரிய பெரிய ஜாம்பவான்களிடம் உதவியாளராக பணிபுரிந்துள்ளார். மௌனம் பேசியதே, ராம், பருத்தி வீரன் படங்களில் அமீருக்கு உதவியாளராக இருந்துள்ளார். இவர் இயக்கிய படங்களில் சுப்பிரமணியபுரம், ஈசன் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன.

அதே போல சுப்பிரமணியபுரம் படத்தைத் தயாரித்தவரும் இவர் தான். பசங்க படத்தையும் தயாரித்துள்ளார். சிறந்த படத்துக்கான பிலிம்பேர் விருதை சுப்பிரமணியபுரம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் நடிப்பில் நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், தாரை தப்பட்டை, வெற்றிவேல் சூப்பர்ஹிட்.

கம்பீரமான குரலுக்குச் சொந்தக்காரரான இவரது நெருங்கிய நண்பர் சமுத்திரக்கனி. இவர் தனது முதல் படத்தில் இவரை நடிக்க வைத்துள்ளார். அதே போல சமுத்திரக்கனியும் சசிக்குமாரை தான் இயக்கிய நாடோடிகள் படத்தில் நடிக்க வைத்து விட்டார். என்ன ஒரு ப்ரண்ட்ஷிப் என நிரூபித்துவிட்டார்கள்.

தற்போது இவரது ஆசான் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. என்னன்னு பார்க்கலாம். ஜேம்ஸ்வசந்தன் மியூசிக் டீச்சராக இருந்த போது ஏழாம் வகுப்பு படித்து வந்தாராம் சசிக்குமார். அப்போது அவர் சொன்னது ஆச்சரியமாக இருக்கிறது. அது அப்படியே நடந்துள்ளது. என்ன சொன்னாருன்னு தெரியுமா?


'எனக்கு சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று ஆசை. நீங்க பெரிய மியூசிக் டைரக்டர் ஆகிடுவீங்க. நான் சினிமாவுக்கு இயக்குனராக வரும்போது நீங்க என் முதல் படத்திற்கு இசை அமைக்க மறுக்கக்கூடாது'ன்னு அப்பவே சொல்லி இருக்கிறார். அவர் சொன்ன மாதிரியே ஜேம்ஸ் வசந்தனுக்கு முதல் பட வாய்ப்பும் கொடுத்துள்ளார்.

2008ல் சசிக்குமார் முதன் முதலில் படத்தை இயக்குகிறார். அதுதான் சுப்ரமணியபுரம். அந்தப் படத்திற்கு இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். படத்தில் சமுத்திரக்கனி, சுவாதி, ஜெய், கஞ்சா கருப்பு ஆகியோருடன் சசிக்குமாரும் இணைந்து நடித்துள்ளார். படம் சூப்பர் டூப்பர் ஹிட். படத்தில் வரும் கண்கள் இரண்டால் பாடல் இன்று வரை நம் மனதை வருடும் ஒரு அழகான காதல் மெலடி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles
Next Story
Share it