டூரிஸ்ட் ஃபேமிலி ஹிட்டால் பிரச்சனைதான்!.. எல்லாரும் திட்றாங்க!.. சசிக்குமார் ஃபீலிங்!...

Tourist family: சுப்பிரமணியபுரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானவர் சசிக்குமார். முதல் படமே சூப்பர் ஹிட். அடுத்து ஈசன் என்கிற படத்தை இயக்கினார். அந்த படத்திற்கு பின் முழு நேர நடிகராக மாறிவிட்டார். தொடர்ந்து மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க துவங்கினார். குறிப்பாக அவரின் நண்பர் சமுத்திரக்கனி இயக்கத்தில் நடித்த நாடோடிகள் படம் இவருக்கு முக்கிய படமாக அமைந்தது.
பாலாவின் இயக்கத்தில் உருவான தாரை தப்பட்டை படத்தை சசிக்குமாரே தயாரித்து நடித்தார். ஆனால், அந்த படம் ஓடவில்லை. இதனால் பல கோடி கடனாளி ஆனார். இது தொடர்பான பிரச்சனையில் அவரின் நிறுவனத்தை கவனித்து வந்த உறவினர் அசோக் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஃபைனான்சியர் அன்பு செழியன் மீது காவல் நிலையத்திலும் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதிலிருந்து மீளவே சசிக்குமாருக்கு பல மாதங்கள் ஆனது. ஒருவழியாக மீண்டும் கடனை அடைப்பதற்காக கிடைத்த எல்லா படங்களிலும் நடித்தார். அப்படித்தான் அவருக்கு சில மொக்கை படங்கள் அமைந்தது. இதை அவரே பேட்டியில் சொல்லியிருந்தார். கடந்த சில வருடங்களாக நல்ல கதையசம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார்.

நந்தன் திரைப்படம் நடப்பு அரசியலை பேசும் ஒரு முக்கிய படமாக அமைந்தது. அதேபோல், புதுமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிக்குமர், சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படமும் பேசப்பட்டது. 10 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் இதுவரை 90 கோடி வசூலை தாண்டிவிட்டது. 2026ம் வருடம் இது ஒரு முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது. விரைவில் ஃப்ரீடம் என்கிற படம் வெளியாகவுள்ளது. இதுவும் இலங்கை தமிழர் தொடர்பான கதைதான்.
இந்நிலையில், டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றிவிழாவில் பேசிய சசிக்குமார் ‘இந்த படம் ஓடியதால் நான் சம்பளத்தை ஏற்றமாட்டேன் என ஏற்கனவே பேசினேன். இதனால் எங்கு போனாலும் ‘நீ என்ன காந்தியா?. ஹிட் கொடுத்த எல்லாரும் சம்பளத்தை ஏற்றும்போது நீ மட்டும் என்ன ரொம்ப நல்லவானா?’ என கேட்கிறார்கள்.
மேலும், நான் வட்டிக்கு பணம் வாங்கிய சில இடங்களில் இன்னமும் இண்ட்ரஸ்ட் தாராமல் இருக்கிறேன். அவர்கள் எல்லோரும் என்னை தொடர்பு கொண்டு டூரிஸ்ட் பேமிலிதான் நல்லா ஓடுடிடுச்சே. பணத்தை கொடுங்க’ என கேட்கிறார்கள். ‘யோவ். அதுக்கு நான் தயாரிப்பாளர் இல்லை’ என சொன்னேன். சினிமாவில் இருப்பவர்களே அப்படி கேட்கிறார்கள்’ என சிரித்துக்கொண்ட பேசினார் சசிக்குமார்.