சுப்பிரமணியம் 2 வருமா? சசிக்குமாரை ரொம்ப பாதிச்ச நடிகர்கள்.... அட அவர்களா?

by SANKARAN |
subramaniyapuram 2, sasikumar
X

சசிக்குமார் சிறந்த நடிகர் மட்டும் அல்ல இயக்குனரும் கூட. இப்போது அவர் தன்னுடைய படங்களின் கதைத் தேர்வை ரொம்பவே பார்த்து பார்த்து பண்ணுகிறார். இதற்கு முன்பு சில கடன் பிரச்சனைகளால் பெரிய அளவில் அவர் படங்களைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்தவில்லை. எந்தப் படமாக இருந்தாலும் நடித்து வந்தார்.

ஆனால் அயோத்தி படத்துக்குப் பிறகு அவருடைய படங்கள் கவனிக்கத்தக்கவையாக மாறிவிட்டன. சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலியை அனைவருமே கொண்டாடி வருகின்றனர். அந்தப் படத்தைத் தொடர்ந்து அதே சாயலில் ஃபீல் குட் படமாக 3பிஎச்கே வந்து சக்கை போடு போட்டு வருகிறது. இன்னொரு பக்கம் இயக்குனர் ராமின் பறந்து போ படம் மெல்ல மெல்ல பிக்கப் ஆகி வருகிறது.

ஒரு படம்னா அதுல வர்ற ஒரு சம்பவமாவது நம் வாழ்க்கையில் உண்மைக்கு நெருக்கமாக இருக்க வேண்டும். அடடே இது நம்ம வாழ்க்கையிலும் நடந்துருக்கேன்னு எண்ணிப் பார்க்கும் வகையில் இருக்க வேண்டும். அதுதான் ஃபீல் குட் படம்.

சசிக்குமார் இயக்கிய முதல் படம் சுப்பிரமணியபுரம். அந்தப் படத்திலேயே இத்தகைய உணர்வுகள் இருந்தன. அதன் 2ம் பாகமும் தயாராகும் என்றே தெரிகிறது.

அந்த வகையில் அந்தப் படத்தின் பாடல்களும், காட்சிகளும் சுப்பிரமணியபுரம் மாதிரி சூப்பர்ஹிட்டாக இருக்க வேண்டும். எத்தனையோ பேர் பார்ட் 2 எடுத்து சொதப்பி வருகின்றனர். என்று ரசிகர் ஒருவர் கேட்டுக்கொண்டார்.

அதற்கு சசிக்குமாரும் ரொம்ப நன்றி என தெரிவித்துள்ளார். உங்களை பாதிச்ச நடிகர்கள் யார் என பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் சசிக்குமாரிடம் கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான். கமல், ரஜினி ரெண்டு பேரும் பாதிக்காம வரவே முடியாது. ஸ்டைல், ஆக்ஷன்னு ரஜினி சார், கமல் சாரோட ஆக்டிங் இதெல்லாம் நாம பார்த்து பார்த்து தான் சினிமாவுல நடிச்சது என்கிறார் சசிக்குமார்.


2008ல் வெளியானது சுப்பிரமணியபுரம். சசிக்குமார் எழுதி, தயாரித்து இயக்கி நடித்தது. ஜெய், சுவாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு உள்பட பலர் நடித்துள்ளனர். படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் 2ம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. இந்த வேளையில் ரசிகர் கேட்ட கேள்விக்கு சசிக்குமார் நன்றி சொல்லி இருப்பதால் படம் வரும் என்றே தோன்றுகிறது.

Next Story