மொத்த பேரையும் திரும்பி பார்க்க வைத்த சசிக்குமார்!.. மனுஷன் சாதிச்சிட்டாரே!...

சமீபத்தில் அபிஷன் ஜீவன்த் இயக்கத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் டூரிஸ்ட் ஃபேம்லி. இந்தப் படத்தின் இயக்குனருக்கு வெறும் 24 வயதுதான். அவருக்கு சினிமாவில் எந்த அனுபவமும் கிடையாது. கதை ஓகே. மனசை ரொம்ப டச் பண்ணுதுங்கற ஒரே காரணத்துக்காக முன்னணி நடிகரான சசிக்குமாரும் ஒத்துக் கொண்டார்.
இதற்கே பெரிய மனசு வேண்டும். சசிக்குமாரைப் பொறுத்தவரை அவர் நடிகர் மட்டுமல்ல. பெரிய இயக்குனரும் கூட. இவரது இயக்கத்தில் வெளியான முதல் படம் சுப்ரமணியபுரம். பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. அனைவரையும் அண்ணாந்து பார்க்கச் செய்து விட்டார். இப்படியும் ஒரு இயக்குனரா என்று. 80 காலகட்டத்தில் நடந்த அந்தக் கதை அழுத்தமாகவும், அழகியலாகவும், யதார்த்தமாகவும் இருந்தது.
அந்த வகையில் இவர் தொடர்ந்து நடித்த பல படங்களும் ஹிட் அடித்தன. இவர் இயக்கிய ஈசன் படம் ஆவரேஜ் ஹிட்டானது. சமீபத்தில் இவரது நடிப்பில் அதிரிபுதிரி ஹிட் கொடுத்த படம் டூரிஸ்ட் ஃபேம்லி. இப்போது இந்தப் படம் தயாரிப்பாளருக்கு இரு மடங்கு லாபத்தைக் கொடுத்துள்ளது. இப்போது சசிக்குமார் ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். இது அவரது நிறைஞ்ச மனசைக் காட்டுகிறது. என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...
டூரிஸ்ட் ஃபேம்லி படம் வந்ததுக்குப் பிறகு உங்க சம்பளத்தை ஏத்திடுவீங்களான்னு எல்லாரும் கேட்கிறார்கள். கண்டிப்பா சம்பளம் சம்பளம் ஏறாது. அதே சம்பளம் தான். அதற்கு உறுதி அளிக்கிறேன். ஏனென்றால் ஒவ்வொருவரும் சம்பளம் ஏத்தும்போது படத்தின் பட்ஜெட் ரொம்ப ஜாஸ்தி ஆகும். இந்தப் படத்தின் வெற்றி புது இயக்குனர்களுக்கும், தோல்வி அடைந்த இயக்குனர்களுக்கும் புதிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. அதுதான் எனக்கு சந்தோஷம் என்கிறார் சசிக்குமார்.
அயோத்தி படத்துக்கு முன்பு வரை சில படங்களில் தேர்ந்தெடுக்காமல் நடித்து விட்டார் சசிக்குமார். அதுகூட அவரது கடனை அடைப்பதற்காகத் தான் என்று பின்னாளில் தெரிவித்தார். அதன்பிறகு அவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் கவனிக்கத் தக்கவகையில் உள்ளன. அப்படி வந்தது தான் இந்த டூரிஸ்ட் ஃபேம்லி.