பாகுபலிலாம் சும்மா!. அந்த கதையில் மட்டும் விஜய் நடிச்சிருந்தா!.. சசிக்குமார் பேட்டி!..
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வெளியான பாகுபலி, பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை அள்ளியது. அது கொடுத்த தைரியத்தில்தான் மணிரத்தினமே பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக எடுத்தார். இதில், முதல் பாகம் நல்ல வசூலை பெற்றது.
மேலும், கேஜிஎப், காந்தாரா, புஷ்பா போன்ற பேன் இண்டியா படங்களும் வெளியாகி வசூலை பெற்றது. இப்போதெல்லாம் ஷாருக்கான், ரஜினி, கமல், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், பிரபாஸ், ஜுனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜூன் மற்றும் ராம் சரண் போன்ற நடிகர்கள் எல்லாமே பேன் இண்டியா நடிகர்களாக மாறிவிட்டனர்.
ஹாலிவுட்டில் வருவது போல அதிக சரித்திர கதைகள் தமிழ் சினிமாவில் யாரும் எடுப்பதில்லை. அதற்கு காரணம் அதற்கு அசாத்திய உழைப்பை கொடுக்கும் ஹீரோ கிடைக்க வேண்டும். பணம் செலவு செய்ய தயாரிப்பாளர் முன்வர வேண்டும். பாகுபலிக்கு முன்பே சுந்தர் சி சங்கமித்ரா என்கிற சரித்திர கதையை எடுக்க நினைத்து அறிவிப்பெல்லாம் வெளியானது.
ஆனால், சில காரணங்களால் அது நின்று போய்விட்டது. விஜய்க்கு சரித்திர படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை அதிகமாகவே இருந்தது. ஆனால், அப்படி ஒரு கதை அவருக்கு அமையவில்லை. புலி அப்படிப்பட்ட கதைதான் என்றாலும் அது குழந்தைகள் விரும்பும் படமாகவே வெளிவந்தது.
ஆனால், சுப்பிரமணியபுரம் படம் வெளியாகி சில வருடங்களில் இயக்குனர் மற்றும் நடிகர் சசிக்குமார் விஜயிடம் ஒரு சரித்திர கதையை சொல்லி இருக்கிறார். இதுபற்றி வார இதழ் ஒன்றில் பேசிய சசிக்குமார் ’எழுத்தாளர் வெங்கடேசன் ஒரு கதை சொன்னார். அது ஒரு வரலாற்று கதை, விஜய்க்கும் அந்த கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால், பட்ஜெட் அதிகம் என்பதால் படம் டேக் ஆப் ஆகவில்லை.
‘சரி வேற கதை பண்ணலாமா?’ என விஜயிடம் கேட்டோம். ஆனால், அவரோ ‘அந்த கதை மீது எனக்கு நம்பிக்கை இருக்கு. ஒன்று நாம மூணு பேரும் சேர்ந்து அந்த படம் பண்ணனும். இல்லன்னா வேண்டாம்’ என் சொல்லிவிட்டார்’ என சசிக்குமார் சொல்லிவிட்டார். அனேகமாக அது வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நாவலாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.