சினிமாவுலயே மூடநம்பிக்கை... அதுக்கு அப்பவே சத்யராஜ் செய்த லொள்ளு பாருங்க...!

by Sankaran |
sathyaraj
X

தமிழ்த்திரை உலகில் நடிகர் சத்யராஜை புரட்சித்தமிழன்னு சொல்வாங்க. ஏன்னா அவர் பல புரட்சிகரமான கருத்துகளை மூடநம்பிக்கைக்கு எதிராகத் தன் படங்களில் சொல்பவர். மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான அமைதிப்படை படத்தில் பல இடங்களில் மூடநம்பிக்கைக்கு சவுக்கடி கொடுத்திருப்பார் சத்யராஜ். இந்தப் படத்தில் கதாநாயகன், வில்லன் என முற்றிலும் மாறுபட்ட இரு வேடங்களில் நடித்து பட்டையைக் கிளப்பினார் சத்யராஜ்.

படத்தில் மட்டும் அல்லாமல் நிஜ வாழ்க்கையில் சத்யராஜ் ஒரு நாத்திகர்தான். பெரியார் கொள்கையைப் பின்பற்றுபவர். பெரியார் படத்தில் தந்தை பெரியாராகவே வாழ்ந்து காட்டி இருந்தார். அந்த அளவுக்கு அவர் மேல் அதீத பற்றுக்கொண்டவர்.

மூட நம்பிக்கைக் குறித்து அவ்வப்போது தனது கருத்துகளையும் தெரிவித்த வண்ணம் இருக்கிறார். சமீபத்தில் ஒரு கருத்தைத் தெரிவித்து இருந்தார். அதாவது தனிமனித மகிழ்ச்சிக்கு தடையாக இருப்பது மூடநம்பிக்கை தான்.

எந்தவிதமான மூட நம்பிக்கையும் இல்லாத வாழ்க்கைதான் சுலபமாக இருக்கும். நான் நாத்திகனாக மாறிய பிறகு வாழ்க்கை மிகவும் ஜாலியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் தற்போது ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். அது இதுதான். சினிமாவில் செத்து போற மாதிரி நடிச்சிட்டோம்னா, தேங்காய் எடுத்து சுத்துவாங்க. நான் ஓடிப்போயிட்டேன். கேமராவைப் பார்த்து ஒரு தடவை சிரிக்கணும். இல்லனா நான் செத்துப் போயிடுவனாம்

amaithipadai

47 வருஷத்துக்கு முன்னாடி நான் நடிச்ச படம் சட்டம் என் கையில். அந்தப் படத்தில் நான் செத்துடுவேன். கேமராவைப் பார்த்து சிரிங்கன்னு சொன்னாங்க. நான் மாட்டேன்னு சொல்லிட்டேன். 'சிரிக்கலைன்னா நீங்க மண்டையைப் போட்டுட்டா என்ன பண்றது..?'னு கேட்டாங்க. 'அது என் பிரச்சனை. இன்னைக்கு கடைசி நாள் சூட்டிங் தான. விடு நான் பார்த்துக்கறேன்...'னு சொல்லிட்டேன். இப்ப வரைக்கும் நல்லாதான் இருக்கிறேன் என்கிறார் கூலாக சத்யராஜ்.

1978ல் டிஎன்.பாலு இயக்கிய படம் சட்டம் என் கையில். கமல், ஸ்ரீபிரியா, சத்யராஜ் உள்பட பலரும் நடித்து இருந்தனர். இளையராஜா இசையில் சொர்க்கம் மதுவிலே பாடல் இந்தப் படத்தில் தான் உள்ளது. சத்யராஜ் தான் வில்லன். இது தான் சத்யராஜின் முதல் படம். இந்தப் படத்திலேயே அவர் இப்படி துணிச்சலாக நடித்து இருந்தது ஆச்சரியம்தான்.

சத்யராஜ் நடித்த பல படங்களில் புரட்சிகரமான வசனங்கள் வரும். குறிப்பாக அமைதிப்படை, வால்டர் வெற்றிவேல், வேதம் புதிது படங்களைச் சொல்லலாம். இந்தப் படத்தில் சாதீய வன்கொடுமைகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகள் இருக்கும்.

Next Story