இது கொள்கை இல்லை. கூமுட்டை.. லாரியில் அடிபட்டு சாவ!.. விஜயை கடுமையாக திட்டிய சீமான்!...
Vijay seeman: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கியிருக்கிறார். சமீபத்தில் இந்த கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 8 லட்சம் விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
இந்த மாநாட்டில் விஜய் மிகவும் ஆக்ரோஷமாக அரசியல் பேசினார். பிளவுப்படுத்தும் மத அரசியலை செய்பவர்கள் தனது கொள்கை எதிரிகள் எனவும், திராவிட அரசு என சொல்லிக்கொண்டு ஊழல் செய்து கொள்ளையடிக்கும் அரசியல் தனது அரசியல் எதிரி எனவும் பேசினார்.
அதோடு, தமிழ் தேசியமும், திராவிடமும் இரண்டுமே தனது நிலைப்பாடு எனவும் பேசினார். குறிப்பாக, 2026 சட்டமன்ற தேர்தலில் தனது கொள்கை பிடித்து வருபவர்களோடு கூட்டணி அமைப்பேன் எனவும், ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு எனவும் பேசினார். விஜயின் 45 நிமிட பேச்சு அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பல விவாதங்களும் எழுந்தது. விஜயின் பேச்சுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு எல்லாம் உருவாகியிருக்கிறது. விஜயின் அரசியல் பற்றி தொடர்ந்து கருத்து சொல்லி வந்தவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான். விஜயோடு கூட்டணி அமைக்க மிகவும் ஆவலாக இருந்தார். ஆனால், விஜய் ஆர்வம் காட்டவில்லை.
எனவே, 'நான் சீனியர். என் கொள்கை பிடித்திருந்தால் தம்பி விஜய்தான் என்னிடம் வர வேண்டும்' என சொன்னார். ஆனால், தமிழ் தேசியமும், திராவிடமும் ஒன்று என விஜய் பேசியது சீமானுக்கு பிடிக்கவில்லை. ‘விஜயின் கொள்கையில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே, அவரோடு பயணிக்க முடியாது’ என பேட்டி கொடுத்தார்.
இந்நிலையில், ஒரு கூட்டத்தில் பேசிய சீமான் ‘தவெக கொள்கையின் அடிப்படையே தவறு, விஜய் கூறுவது கொள்கை இல்லை. கூமுட்டை.. சாலையில் ஒன்று அந்த ஓரம் நில்.. அல்லது இந்த ஓரம் நில்.. நடுரோட்டில் நின்றால் லாரியில் அடிபட்டு செத்து போய்விடுவாய்.. இது நடுநிலை அல்ல... கொடுநிலை’ என கடுமையாக பேசியிருக்கிறார்.
சீமானின் இந்த பேச்சு விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தவே சமூகவலைத்தளங்களில் அவரை கடுமையாக திட்டி வருவார்கள். விரைவில் சீமானை அசிங்கமாக திட்டி ஹேஷ்டேக் போட்டு அதை டிவிட்டரில் டிரெண்டிங் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.