இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.. விஜயை கலாய்த்த சீமான்..

by Bala |
இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.. விஜயை கலாய்த்த சீமான்..
X

#image_title

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். குழந்தைகள் முதல் பெரியோர் வரை இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இன்றைய தமிழ் சினிமாவில் இவருடைய மார்க்கெட் பிசினஸ் ரஜினி, கமலை விட பல மடங்கு முன்னிலை பெற்று வசூலில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் விஜய். தொடர்ந்து தனக்கான இடத்தை தக்க வைத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலில் களமிறங்கியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் உருவாகி வரும் ’ஜனநாயகன்” படம் தான் தனது கடைசி படம் என்று தெரிவித்துள்ளார். இதன் பிறகு இனி படங்களில் நடிக்கப் போவதில்லை எனவும் என்னுடைய முழு கவனத்தையும் அரசியலில் செலுத்துப் போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவிப்பு கொடுத்தார். அதன்படி ஜனநாயகன் படத்தை நடித்து முடித்துவிட்டு எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தலுக்காக களப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.

கட்சி ஆரம்பித்ததும் தனது முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடத்தினார். அதில் கொள்கை, கோட்பாடு, யார் யார் எங்களுடைய கட்சி தலைவர்கள் என பலவற்றை அறிவித்தார். ஒரு பக்கம் விஜய் மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்தாலும் மறுபக்கம் அதற்கு பல விமர்சனங்கள் வந்ததுண்டு. இந்நிலையில் தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் விஜய் மீது விமர்சனத்தை முன்வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது விஜய் எங்களுடைய கொள்கை முற்றிலும் மாறுபட்டது என்று சொல்கிறாரே, அண்ணா வழியில் சென்று தான் சாதிக்கப் போறேன்னு சொல்கிறார். 60 வருஷமா திமுக அப்படித்தான் போயிட்டு இருக்கு. இதுல என்ன மாறுபட்ட கொள்கை. அப்போ விஜய்யும் அதே 60 வருஷ கொள்கையை தான் பின்பற்ற போகிறாரா ..? விஜயின் கொள்கைதான் என்ன..? என்ற கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்நிலையில் மக்களுக்கான மாற்று அரசியலை கொண்டு வர நினைத்து தான் விஜய் வந்திருக்கிறார். விஜையும் அதே கொள்கையை தான் பின்பற்றுவார் என்று சொன்னால் இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.. என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Next Story