Connect with us
seeman

Cinema News

Jananayagan: ஜனநாயகனுடன் மோதும் சீமான்!.. எங்க தலைக்கு தில்ல பாத்தியா?!….

Seeman: இயக்குனர் மணிவண்ணனிடம் சில படங்களில் வேலை செய்தவர் சீமான். மேலும் பாஞ்சாலங்குறிச்சி, வாழ்த்துக்கள், தம்பி, இனியவளே, வீரநடை ஆகிய 5 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். பல படங்களில் நடித்திருக்கிறார். சினிமா மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானாலும் நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியல்வாதியாக மாறிய பின்னரே சீமான் தமிழ்நாட்டு மக்களிடம் அதிகம் பிரபலமானார்.

திராவிட கட்சிகள் என சொல்லப்படும் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். அதனால் இந்த இரண்டு கட்சிகளையும் பிடிக்காத நடுநிலை வாக்காளர்களின் வாக்குகள் இவருக்கு கிடைத்த வருகிறது. தற்போது அதை தட்டிப் பறிக்க விஜய் வந்து விட்டதால்தான் அவரது கோபத்தை விஜய் மீது காட்டுகிறார் என தவெகவினர் சொல்லி வருகிறார்கள்.

அரசியலில் இருந்தாலும் அவ்வப்போது சீமான் சினிமாவிலும் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள LIK படத்தில் பிரதீப்பின் அப்பாவாக சீமான் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 18ஆம் தேதி வெளியாகயுள்ளது. ஒருபக்கம் தர்மயுத்தம் என்கிற படத்திலும் சீமான் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக படக்குழு சொல்லி வருகிறது. இந்த படம் விஜயின் ஜனநாயகன் படம் வெளியாகும் 2026 ஜனவரி 9ம் தேதி வெளியாகவிருக்கிறது.

2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தவெகவுடன் மோதும் சீமான் அதற்கு முன்பு ஜனநாயகன் படத்திற்கு போட்டியாக தனது படத்தை இறக்கி அவருடன் மோத தயாராகி விட்டார். விஜய் அரசியல்கட்சி துவங்கிய போது அவருக்கு ஆதரவாக பேசிவந்த விஜய் ஒருகட்டத்தில் விஜயை கடுமையாக விமர்சிக்க துவங்கியது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in Cinema News

To Top