இதெல்லாம் நியாயமாப்பா? நயன்தாராவுக்கு அந்தப் படத்துக்கா விருது கொடுப்பீங்க? அர்ஜூனுக்கு எதுக்கு விருது?

தென்னிந்திய அளவில் சிறந்த விருதாக சைமா விருது பார்க்கப்படுகிறது. அதற்கான லிஸ்டைப் பார்த்தால் இந்த விருதுகள் எல்லாம் எந்த அடிப்படையில் கொடுக்கப்படுகிறது? விருதுகளை யார் செலக்ட் பண்ணினது? விருதுகள் கொடுக்குற நடுவர் குழு இந்தப் படங்களை எல்லாம் பார்த்திருக்காங்களா?

லியோ படத்துக்கு ஒரு விருது, பெஸ்ட் நெகடிவ் கேரக்டர் அர்ஜூன், ஜெய்லர்க்கு 4 விருதுகள் கிடைச்சிருக்கு. சிறந்த திரைப்படம் ஜெய்லர், சி றந்த இயக்குனர் நெல்சன், சிறந்த சப்போர்ட்டிங் கேரக்டர் வசந்த் ரவி. ஏன் ரஜினி சிறந்த நடிகர் இல்லையா? ஏன் கொடுக்கல? லியோல சஞ்சய் தத்துக்கு ஏன் கொடுக்கல? லோகேஷ்க்கு ஏன் கொடுக்கல? விஜய்க்கு கொடுத்துருக்க வேண்டியது தானே? சிறந்த நடிகர்கள் 2 பேரு.


கிரிட்டிக்ஸ் மாவீ சிகா சிறந்த நடிகர் பொ செல் விக். சிறந்த நடிகை நயன் தாரா. மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அன்னபூரணி படத்துக்கு கொடுத்துருக்காங்க. அது எந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டது. அந்தப் படம் எவ்வளவு பேருக்கு ரீச்சாச்சுங்கறது தான் பெரிய விஷயம். இந்தப் படத்தோட ரிலீஸ் அன்னைக்கு பெரிய சர்ச்சை வருது. அதை வச்சே 50 நாள் ஓட்டியிருக்கலாம். ஆனா என்னாச்சுன்னு தெரியல.

பிராமண குடும்பத்துல இருந்து வர்ற நயன்தாராவுக்கு செப் ஆக வேண்டும் என விருப்பம். ஆனால் அசைவ உணவு சமைக்க வேண்டும். ஒரு காலகட்டத்தில் அசைவ உணவையே சாப்பிட வேண்டிய அவசியம் வருது. அதனால் பெரிய சர்ச்சை உண்டானது. ராமர், சீதை வனவாசத்தின் போது அங்கிருக்கிற மான் எல்லாம் அடிச்சி சாப்பிட்டுருப்பாங்கன்னு சொல்ற ஒரு வசனம் தான் சர்ச்சைக்குள்ளானது. அது பெரிய பிரச்சனையானது.

இப்படிப்பட்ட டயலாக் எப்படின்னு கடுமையான எதிர்ப்பு வட இந்தியா முழுவதும் தொடர்ந்தது. ஆனா படக்குழு இந்த சர்ச்சையை வைத்து கல்லா கட்ட நினைத்தது. ஆனால் கன்டன்ட் ஒண்ணுமே இல்லை. படம் ஓடவே இல்லை. வாழை படம் சக்சஸ் ஆனதுக்குக் காரணம் கன்டன்ட் தான். அதனால அந்தப் படத்துல இருந்து சிறந்த நடிகையாக நயன்தாராவை எப்படி தேர்ந்தெடுக்கலாம் என்பது தான் விஷயம். முன்னாடி எல்லாம் போன் பண்ணி கேட்பாங்களாம்.

எனக்கு ஏதாவது விருது கொடுப்பீங்களே. இப்ப ஏன் கொடுக்கலன்னு கேட்பாங்களாம். இப்போ யாருமே இல்லாத போது நயன்தாராவுக்கு விருது கொடுத்துருப்பாங்க. இப்படி எல்லாம் கொடுக்கும்போது விருது மீதான நம்பிக்கை இங்கு தான் தகர்ந்து போனது. ஆர்ஆர்ஆர் படத்துக்குக்கூட ஆஸ்கர் கிடைக்கும்போது இவ்வளவு டாலர் பணம் கட்டினால் விருதுகள் விற்கப்படும் என்ற பேச்சு எழுந்தது. மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

Related Articles
Next Story
Share it