அனுஷ்கா இடுப்பால வந்த வினையைப் பாருங்க... அடேங்கப்பா இவ்ளோ விபத்துக்களா?

கவர்ச்சி நடிகைகளாக களம் இறங்குபவர்களால் விபத்துக்கள் தான் போல. நடிகை அனுஷ்கா, யாஷிகா ஆனந்த் ஆகியோரைக் குறிப்பிட்டு சில சம்பவங்களை மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகிர்ந்துள்ளார். என்னன்னு பாருங்க.
ஹைதரபாத்தில் பஞ்சகுண்டா என்ற இடத்தில் தொடர்ந்து விபத்துக்கள் வந்த வண்ணம் உள்ளன. பெரிய ரோடாக இருந்தாலும் 43 விபத்துக்கள் நடந்துள்ளதாம். அதன்பிறகு சிசிடிவி கேமராவை எல்லாம் ஆராய்ந்து பார்த்தால் தான் தெரிகிறது.
அவர்கள் எல்லாரும் மேலேயே பார்த்தபடி கார் ஓட்டினார்களாம். அங்கே அனுஷ்கா ஷெட்டியின் பெரிய பேனர் வேதம் படத்துக்காக வைக்கப்பட்டு இருந்ததாம். அதே படம் தான் இங்கு வானம் என்ற பெயரில் சிம்புவும், அனுஷ்காவும் நடித்து வெளியே வந்தது.
கவர்ச்சி அம்சத்துடன் இடுப்பைக் காட்டியபடி இருந்ததால் அந்த பேனரைப் பார்த்ததால் தான் விபத்து வந்து விட்டது என்று அங்கு அந்த பேனரை படக்குழுவை வைத்து எடுக்க வைத்து விட்டார்களாம். ஆனால் அனுஷ்கா மேலும் வழக்குப் பதிய வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார்களாம்.

அதே போல 2021ல் ஒரு நள்ளிரவில் மகாபலிபுரம் சாலையில் ஒரு கார் படுவேகமாக வந்து தலைகுப்புற கவிழ்ந்து விழுந்தது. கடற்கரையோர கிராமத்தில் இருந்து மக்கள் ஓடி வந்து அந்தக் காரை தூக்கிப் பார்த்தால் யாஷிகா ஆனந்த் இருக்கிறார். 2 பேர் இறந்தும் விட்டார்கள். அதுவும் ஹைதராபாத்தில் இருந்து பார்ட்டி முடித்து விட்டு திரும்பி வரும்போதுதான் இப்படி விபத்து நடந்துள்ளது.
இங்கு போக்குவரத்து சட்டம் பெரிய அளவில் கடுமையாக இல்லை. ஆனால் லண்டனில் ஹரிபார்ட்டரில் தொடர்ந்து நடித்த எம்மா என்ற நடிகை 40 கிமீ.க்குப் பதிலாக 60கி.மீ. வேகத்தில் கார் ஓட்டியதற்காக 6 மாதத்திற்கு லைசன்ஸையே ரத்து செய்து விட்டார்களாம். அதே போல 1 லட்சம் அபராதமும் விதித்து விட்டார்களாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.