உங்களுக்கு வந்தா இரத்தம்... எங்களுக்கு தக்காளி சட்னியா? குளிர்பான விளம்பரத்துக்கு எதிர்ப்பு... காட்டமான ஷாருக்கான்
Sharukkhan: சினிமா நடிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையை வெகு சுலபமாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கையாண்டிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.
ஆன்லைன் சூதாட்டம், குளிர்பானம் மற்றும் புகையிலை உள்ளிட்ட சுகாதாரக் கேடான விஷயங்களின் விளம்பரங்களில் பிரபல நடிகர்கள் நடித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் காசுக்காக ரசிகர்களை தப்பான வழியில் நடத்துவதாக கண்டனங்களும் பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியாக எழுந்து வருகிறது.
தமிழில் கூட ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடித்த பிரபல நடிகர்களை தற்போது வரை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இப்படி ஒரு சூழலில் கரண் தாப்பர் நிகழ்ச்சியில் ஷாருக்கான் கலந்து கொண்ட போது அவரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சற்று காட்டமாகவே ஷாருக்கான் பதில் அளித்து இருக்கிறார். அவர் கூறுகையில், குளிர்பானம் குழந்தைகளுக்கு கேடாக இருக்கிறது என்றால் அதை உற்பத்தி செய்வதை நிறுத்தி விடுங்கள். சிகரெட் உள்ளிட்ட புகையிலை தவறான விஷயம் என்றால் அதை விற்பனை செய்யாதீர்கள்.
நீங்கள் உற்பத்தி செய்யும் போதோ, வியாபாரம் செய்யும் போதோ உங்களுக்கு லாபம் கிடைக்கிறது. உங்களுக்கு வருவாய் கிடைக்கிறது என்பதால் அதை நிறுத்த மாட்டீர்கள். சமூகத்தை கெடுக்கும் விஷயமாக இருந்தாலும் உங்களுக்கு பணம் கிடைக்கிறது என்றால் அதை நிறுத்துவதில்லை.
ஆனால் நடிகரான எங்களை மட்டும் தடுப்பது எந்த விதத்தில் நியாயம். எங்களை தடுக்காதீர்கள். சினிமாவில் நடிகர்கள் புகை பிடிப்பதை பார்த்து எந்த ரசிகர்களும் கெட்டு விடுவதில்லை. அவர்களுக்கு சரி இது தவறு இது என்பது தெரியும்.
தவறான விஷயம் உலா வருகிறது என்றால் அதை அடியோடு அழிப்பது அரசாங்கத்தின் வேலை. நான் நடிகன். விளம்பரங்களில் நடிப்பது என்னுடைய வேலை நான் அதை தான் செய்து கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
பாலிவுட் பிரபல நடிகரே இப்படி பேசி இருப்பது தற்போது மற்ற நடிகர்களுக்கெல்லாம் தைரியத்தை கொடுத்திருக்கும். இனி வரும் காலங்களில் தமிழ் நடிகர்களும் இதே பதிலை கூறவும் வாய்ப்பு இருப்பதாக ரசிகர்களிடம் பேச்சுக்கள் அடிப்பட்டு வருகின்றது.