மீண்டும் சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் ஷாலினி… அதுவும் அஜித்தின் இந்த படத்திலா?

by Akhilan |
shalini ajith
X

Ajithkumar: அஜித் குமாரின் மனைவி ஷாலினி அஜித் மீண்டும் நடிப்புக்கு திரும்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் முக்கிய பிரபல தம்பதிகளில் அஜித் மற்றும் ஷாலினிக்கு இடம் உண்டு. இருவரும் அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்த பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷாலினி.

அப்போதே ரசிகர் இடம் தன்னுடைய நடிப்பால் மிகப்பெரிய இடத்தை பிடித்திருந்தார். பின்னர், ஹீரோயின் ஆகவும் அறிமுகமாகி நடிப்பில் அசத்தி வந்த ஷாலினி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.

அஜித்துடன் திருமணத்திற்கு பிறகு அவர் நடிப்பின் மீது ஆர்வம் காட்டவில்லை. அதிலிருந்து விலகி தன்னுடைய குடும்பத்தின் மீது முழு கவனத்தையும் செலுத்தி வந்தார். அது மட்டுமில்லாமல் தற்போது ஸ்போர்ட்ஸிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் அஜித்குமார் நடித்து வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் ஷாலினி நடித்திருக்கும் எனத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவர் ஸ்பெஷல் கேமியோவாக அஜித் உடன் ஜோடி போட்டு நடித்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

ஏனெனில் படத்தில் வரும் ஒரு காட்சியின் அதே பேக்ரவுண்டில் அஜித்துடன் ஷாலினி இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வருகிறது. இது நடக்கும் பட்சத்தில் இந்த ஜோடி 25 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திரையில் தோன்றுவதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் தன்னுடைய ரேஸிங் களத்தில் அஜித்குமார் எல்லாம் தன் மனைவியால் தான் என குறிப்பிட்டு அவருக்கு பறக்கும் முத்தங்களை கொடுத்ததும் இணையத்தில் வெளியானது வைரலானதும் குறிப்பிடத்தக்கது.

Next Story