1000 கோடி பட்ஜெட்.. வேள்பாரியில் ரஜினி, கமல்!.. ஷங்கர் போடும் மெகா ஸ்கெட்ச்..

velpari
பிரம்மாண்டத்தின் உச்சம் என்றால் அது இயக்குனர் சங்கர்தான். ஜெண்டில்மேனில் தொடங்கி இந்தியன் 2 வரை பிரம்மாண்ட படைப்புகளாகத்தான் இவர் கொடுத்திருக்கிறார். படத்தில் ஒரு பாடலுக்கே கோடி கோடியாக செலவு செய்து பிரம்மாண்டப்படுத்துவதில் சங்கரை விட்டால் வேறு யாருமில்லை. ஆனால் சமீபகாலமாக சங்கரின் படங்கள் ரசிகர்களை ஈர்க்கவில்லை என்பதுதான் உண்மை.
இந்தியன் 2 திரைப்படம் மோசமான விமர்சனத்தை சந்தித்தது. சரி. அதன் பிறகு வெளியான கேம் சேஞ்சர் படமாவது அவருக்கு கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுக்கு இந்தியன் 2 படமே பரவாயில்லை என்றுதான் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். சொல்லப்போனால் சங்கர் மீதிருக்கும் நம்பிக்கையே மக்களுக்கு போய்விட்டது என்று சொல்லலாம்.
இந்த நிலையில் தான் சங்கர் அடுத்து இயக்க இருக்கும் வேள்பாரி படம் குறித்து பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அடிப்படையில் வேள்பாரி நாவல் அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான நாவல். அதனால் அது ஒரு ப்ளஸ். அந்த நாவலை எப்படி படமாக்கப் போகிறார் என்பதை பார்க்கவே ரசிகர்களும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சங்கரின் தொடர் தோல்வி பல தயாரிப்பாளர்கள் சங்கரை வைத்து படம் எடுக்க யோசிக்கத்தான் செய்வார்கள். அதனால் வேள்பாரி படத்தை பெரிய வெற்றியாக்க வேண்டும் என்ற முயற்சியில் சங்கர் களமிறங்க இருக்கிறார். எப்படியாவது 1000 கோடி பட்ஜெட்டை அடைய வேண்டும் என்றும் யோசித்து வருகிறார். அதற்காக வேள்பாரியில் ரஜினியையும் கமலையும் நடிக்க வைக்க அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் சங்கர்.

rajinikamal
ரஜினியை பொறுத்தவரைக்கும் இனிமேல் சங்கர் படத்தில் நடிக்க மாட்டேன் என்ற எண்ணத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்தியன் 3 படம் ரிலீஸாவதில் தன்னால் முடிந்த உதவியை செய்வதாகவும் ரஜினி தெரிவித்திருக்கிறார். நடிகர் என்பதையும் தாண்டி சங்கருக்கு மிகவும் நெருக்கமானவராகத்தான் பார்க்கப்படுகிறார் ரஜினி. ரஜினியும் கமலும் இணைந்தால் அது கண்டிப்பாக பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையை கிளப்பும் படமாகத்தான் இருக்கும். அதனால் இந்த இருவர் ஒன்றாக மீண்டும் இணைவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.