தயாரிப்பாளர் சொன்னது தப்பா போச்சே… கேம் சேஞ்சரில் வேற லெவல் சம்பவம் செய்த ஷங்கர்

by Akhilan |
தயாரிப்பாளர் சொன்னது தப்பா போச்சே… கேம் சேஞ்சரில் வேற லெவல் சம்பவம் செய்த ஷங்கர்
X

Shankar: ஷங்கர் இயக்கத்தில் தற்போது உருவாக்கி வரும் பேன் இந்தியா திரைப்படமான கேம் சேஞ்சர் திரைப்படத்தில் அவர் செய்த வேற லெவல் சம்பவம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கேம்சேஞ்சர். பொதுவாகவே ஷங்கர் தன்னுடைய படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் எடுப்பதைதான் வழக்கமாக வைத்திருப்பார். இதனால் அவருக்கு கோலிவுட் உலகில் மிஸ்டர் பிரம்மாண்டம் என்ற பெயரும் உண்டு.

ஷங்கர் இயக்கத்தில் வெளியாகும் எல்லா திரைப்படங்களுமே வசூல் வெற்றியை பெரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இதற்கு விதிவிலக்காக கடைசியாக வெளியான இந்தியன்2 திரைப்படம் அமைந்தது. இப்படம் ரசிகர்களிடம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது.

படத்திற்கு கதையை பிரபல தமிழ் இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் எழுதியிருப்பது ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. கியாரா அத்வானி இப்படத்தில் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். தில் ராஜி படத்தினை தயாரித்து வருகிறார்.

பொதுவாகவே பிரம்மாண்டத்திற்கு பெயர் போன ஷங்கர் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் டெக்னாலஜி மையமாக வைத்து தான் கதையை உருவாக்கி இருக்கிறாராம். இதனால் தண்ணி போல பணத்தை கொட்டி கொண்டு இருக்கிறாராம் தில் ராஜு.

இந்நிலையில் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் ஒரு பாடலுக்கு மட்டுமே 20 கோடி வரை செலவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஒரு வார்த்தை தயாரிப்பாளர் சொல்லிவிட்ட காரணத்தால் இப்படி தண்ணி மாதிரி காசை கொட்ட வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Next Story