கேம் சேஞ்சர் இந்த படங்கள் போலதான் இருக்குமா?.. என்ன ஷங்கர் இப்படி சொல்லிட்டாரு!..
Game Changer: தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து வந்தவர் இயக்குனர் ஷங்கர். தன்னுடைய படைப்பின் மூலமாக பிரம்மாண்ட இயக்குனர் என்கின்ற பெயரை பெற்ற ஷங்கர். தற்போது தெலுங்கு சினிமாவிலும் கால் பதித்திருக்கின்றார். தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் என்கின்ற திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார்.
இந்த திரைப்படத்தில் ராம்சரணுடன் இணைந்து கியாரா அத்வானி, நடிகை அஞ்சலி மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து இருக்கின்றார் தயாரிப்பாளர் தில் ராஜு. இந்த திரைப்படம் பொங்கல் கொண்டாட்டமாக நாளை வெளியாக இருக்கின்றது.
ஆந்திராவில் இந்த திரைப்படத்திற்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு இருக்கின்றது. மேலும் ஆந்திர மாநிலத்தில் அதிகாலை 4 மணி காட்சி மட்டும் இல்லாமல் நள்ளிரவு ஒரு மணி காட்சிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்பெஷல் காட்சிகளுக்கு அதிக விலைக்கு டிக்கெடுகளை விற்பனை செய்வதற்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ப்ரீ புக்கிங்கில் கேம் சேஞ்சர் திரைப்படம் சக்க போடு போட்டு வருகின்றது. ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு பிறகு ராம் சரண் நடிக்கும் திரைப்படம் இது என்பதால் அவரின் ரசிகர்கள் இந்த திரைப்படத்தின் மீது ஏகப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். மேலும் படத்தின் பாடல், டீசர், டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றது.
இது நேரடி தெலுங்கு திரைப்படம் என்றாலும் தமிழ் சினிமாவிலும் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கின்றது. படம் நாளை வெளியாக இருப்பதால் படக்குழுவினர் தொடர்ந்து புரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் இயக்குனர் சங்கர் தற்போது பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றார்.
இந்த பேட்டிகளில் தனது அடுத்த திரைப்படம் குறித்த தகவலையும் கேம் சேஞ்சர் திரைப்படம் குறித்த செய்தியையும் பகிர்ந்து வருகின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'தில், தூள், கில்லி போன்ற திரைப்படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும். அந்த படங்களை பார்க்கும் போது மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். அப்படி ஒரு திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
அப்படி ஒரு நல்ல மசாலா படமாக எடுக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அதற்கு ஏற்றார் போல் இந்த கதை அமைந்ததால் தெலுங்கில் ராம் சரணை வைத்து இப்படத்தை இயக்கியிருக்கின்றேன். இந்த திரைப்படமும் அந்த படங்களின் சாயலில் இருக்கும் என்று தெரிவித்து இருக்கின்றார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் இயக்குனர் ஷங்கரும் மசாலா படம் எடுப்பதற்கு ஆசைப்பட்டிருக்கின்றாரே என்று கூறி வருகிறார்கள்.