4 பாட்டுக்கு 75 கோடிதான்!.. ஆனா அதுல ஷங்கர் செஞ்சிருக்க விஷயத்தை கொஞ்சம் பாருங்க..!

by Ramya |
game changer songs
X

game changer songs

கேம் சேஞ்சர் திரைப்படத்தில் இயக்குனர் ஷங்கர் நான்கு பாடலுக்கு மட்டுமே கிட்டதட்ட 75 கோடி செலவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவலை கேட்டு பலரும் அதிர்ச்சி அடைந்து போயிருந்தார்கள். நான்கு பாடலுக்கு 75 கோடியா? என்று ரசிகர்கள் பலரும் வாயைப் பிளந்து கொண்டிருந்தார்கள். இந்நிலையில் அந்த 75 கோடி எப்படி செலவானது என்பது குறித்து தகவல் வெளிவந்திருக்கின்றது.

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர். இந்த திரைப்படம் ஜனவரி 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள்.

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நிலையில் கேம் சேஞ்சர் திரைப்படம் நிச்சயம் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று நம்பி வருகிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தை இயக்குனர் சங்கர் மிகவும் பிரம்மாண்டமாக எடுத்திருக்கின்றார். மேலும் பாடலுக்கு மட்டுமே 75 கோடி செலவு செய்து இருக்கின்றார். அப்படி அவர் எதற்காக இவ்வளவு செலவு செய்து பாடலை எடுத்துள்ளார் என்பது தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது.



ஜருகண்டி பாடல்:

ராம் சரண், கியாரா அத்வானியும் இணைந்து ஆடி இருக்கும் ஜருகண்டி பாடலுக்கு பிரபுதேவா டான்ஸ் கொரியாகிராப் செய்திருக்கின்றார். இந்த பாடலில் மொத்தம் 600 டான்ஸர்கள் ஆடி இருக்கிறார்கள். கிராமத்து செட்டு போட்டு 13 நாட்கள் இப்பாடலுக்கு ஷூட்டிங் நடந்திருக்கின்றது. இதில் அனைவரும் அணிந்திருந்த உடைகள் சனலால் உருவாக்கப்பட்டது.

நானா ஹைரானா:

நானா ஹைரானா என்ற பாடலை இன்ஃப்ரா ரெட் கேமரா வைத்து எடுத்திருக்கிறார்கள். இந்திய சினிமாவில் முதன்முதலாக இன்ஃப்ரா ரெட் கேமரா வைத்து எடுக்கப்பட்ட பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் முழுக்க முழுக்க நியூசிலாந்தில் ஷூட்டிங் செய்யப்பட்டிருக்கின்றது.

ரா மச்சா:

ரா மச்சா மச்சா என்ற பாடலுக்கு கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைத்து இருக்கின்றார். இந்த பாடலுக்கு மட்டும் கிட்டத்தட்ட 1000 டான்ஸர்கள் நடனமாடி இருக்கிறார்கள். ஷங்கர் படங்களில் இதெல்லாம் சாதாரணமாக நடக்கக்கூடிய ஒரு விஷயம் தான்.

தோப் பாடல்:

தோப் பாடலுக்கு ஜானி மாஸ்டர் கொரிய கிராப் செய்து இருக்கின்றார். அந்த பாடலுக்கு ரஷ்யாவை சேர்ந்த கிட்டத்தட்ட நூறு டான்ஸர்கள் ஆடி இருக்கிறார்கள். இந்த பாடல் 8 நாட்களில் சூட்டிங் செய்யப்பட்டிருக்கின்றது. வெளிநாட்டு டான்ஸர்கள் ஒரு பாடலுக்கு 100 பேர் ஆடி இருப்பது பலரையும் இயக்க வைத்திருக்கின்றது.

Next Story