ரஜினியை எப்போ கைது செய்வீங்க?… மனைவி லதாவையும் விடக்கூடாது… டாக்டர் பகீர் புகார்…

Rajinikanth: உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் குறித்து பகீர் குற்றச்சாட்டை டாக்டர் ஒருவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் தொடர்ச்சியாக தெரிவித்து வருவது வைரல் ஆகி வருகிறது.

கூலி திரைப்படத்தின் ஷூட்டிங் பிசியாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் இருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய இருதய குழாயில் அடைப்பு இருப்பதாக கூறி அவருக்கு ஸ்டெண்ட் வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இனி தொடர்ந்து அவர் விரைவில் குணமடைந்து கூலி திரைப்படத்தின் சூட்டிங் இருக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் தவமிருந்து வருகின்றனர்.

இந்நிலையில் டாக்டர் ராஜலட்சுமி கந்தசாமி என்பவர் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவர் மனைவி லதா ரஜினிகாந்த் எப்போ கைது செய்வீங்க? அவர்கள் என்னை கொலை மிரட்டல் விடுகின்றனர். ஒரு சில முறை என்னை கொல்லவும் முயற்சி செய்திருப்பதாக பகீர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இது குறித்து அவருடைய எக்ஸ் தளத்தை ஆராய்ந்து பார்த்ததில் தொடர்ச்சியாக ரஜினிகாந்த் மீதும் அவருடைய மனைவி மீதும் புகார்களை பதிவுகளாக போட்டுக் கொண்டு வருகிறார். ஆனால் எதற்காக இத்தகைய குற்றச்சாட்டு என்பதை அவர் தெளிவாக தன்னுடைய பதிவுகளில் தெரிவிக்காமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

லதா ரஜினிகாந்த் தன்னிடம் வேலை செய்பவர்களை துன்புறுத்துவதாகவும், வன்முறையுடன் நடந்து கொள்வதாகவும் சில இடங்களில் அவருடைய பதிவும் இருக்கிறது. விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படும் ரஜினிகாந்தை கைது செய்ய வேண்டும் என அவர் பதிவும் திடீரென வைரலாகி வருவதும் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles
Next Story
Share it