சண்முகப்பாண்டியனுக்கு முதல்ல விஜயகாந்த் வச்ச பேரு... ரொம்ப டெரரா இருக்கே...!

விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் இப்போது படைத்தலைவன் படத்தில் நடித்துள்ளார்.
அன்பு இயக்கத்தில் சண்முகப்பாண்டியன் நடித்துள்ள படம் படைத்தலைவன். படத்தில் விஜயகாந்தை ஏஐ யில் காட்டியுள்ளார்கள். கஸ்தூரி ராஜா, யாமினி சந்தர், முனிஸ்காந்த், அருள்தாஸ், யூகி சேது, ஏ.வெங்கடேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். உன் முகத்தைப் பார்க்கலையே என்ற பாடலை அவரே எழுதியுள்ளார்.
இந்தப் படத்திற்காக சண்முகப்பாண்டியன் 5 யானைகளுடன் பழகி கஷ்டப்பட்டு நடித்துள்ளார். படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் வரும் 23ம் தேதி வெளியாகிறது.
இதையொட்டி பல மீடியாக்களில் அவரது பேட்டி இடம்பெற்று வருகிறது. சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் அவரது பெயர் முதலில் சண்முகப்பாண்டியன் கிடையாது என்றும் சௌகத் அலி என்றும் தெரிவித்துள்ளார். பின்னர் அது எப்படி மாறியது என்பதை அவரே சொல்கிறார் பாருங்க.
எங்க சாமி ரூம்ல 3 மதத்தோட சாமி போட்டோ தான் முதலில் இருக்கும். அதுக்கு அப்புறம் தான் சுத்தி மற்ற சாமி போட்டோக்கள் எல்லாம் இருக்கும். நாங்க 3 மதத்தையும் கும்பிடுவோம். எனக்கே அப்பா முதலில் சௌகத் அலின்னு தான் பேரு வைத்தார்.
எனக்கு ஏன் பேரை மாற்றினார்கள் என்றால் பாஸ்போர்ட்டில் பிரச்சனை வரும் என்றுதான். பாஸ்போர்ட்ல இந்துன்னு இருக்கும்போது சௌகத் அலி என்று பெயர் வைத்தால் எல்லா இடத்திலேயும் நிப்பாட்டுவாங்க என்று ஒரு ஐஏஎஸ் அதிகாரி சொன்னார். அதனால்தான் அப்பா சண்முக பாண்டியன்னு மாற்றினார் என்கிறார்.
விஜயகாந்த் நடித்த சத்ரியன், ரமணா போன்ற படங்களில் நடிக்க ஆசை என்றும் சண்முகப்பாண்டியன் தெரிவித்துள்ளார். படைத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரமணா 2 படத்தைக் கண்டிப்பாக எடுக்கலாம் என்றும் தெரிவித்து இருந்தார். அடுத்ததாக பொன்ராம் இயக்கத்தில் சண்முகப்பாண்டியனுக்கு கொம்புசீவி படமும் வெளியாக உள்ளது. இதற்கான டப்பிங் பணிகள் தற்போது போய்க்கொண்டு இருக்கிறது.