கமலின் புதிய படத்தில் இணைந்த பிரபலம்!.. வெளியான போட்டோ!.. சும்மா அதிருது!…
KH237: விக்ரம் திரைப்படத்திற்கு பின் கமலின் நடிப்பில் உருவாகி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தியன் 2 மற்றும் தக் லைப் இரண்டு படங்களுமே ரசிகர்களை ஏமாற்றியது. இத்தனைக்கும் இந்த இரண்டு படங்களுக்கும் பெரிய அளவில் புரோமோஷன் செய்யப்பட்டது. தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மும்பை என பல ஊர்களுக்கும் சென்று பல மணி நேரங்கள் புரமோஷன் செய்தார் கமல். ஆனாலும் அந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை.
இதுவரை மீம்ஸில் வராத இயக்குனர் மணிரத்தினம் கூட தக் லைப் படத்தால் மீம்ஸில் வந்தார்.
தக் லைப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போனது கமலை கொஞ்சம் அப்செட் செய்திருப்பதாகவே சொல்லப்படுகிறது. அதனால்தான் அவரின் அடுத்த பட வேலைகள் மிகவும் மெதுவாகவே நடந்து வருகிறது.
சண்டை பயிற்சி இயக்குனர்கள் அன்பு-அறிவு இயக்கத்தில் கமல் ஒரு படத்தில் நடிக்கப் போவதாக பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. தற்போது அதுவே கமலின் அடுத்த படமாக உருவாகவிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தில் ஷியாம் புஸ்கரன் பணியாற்றவிருக்கிறார். இவர் மலையாளத்தில் முக்கிய திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக இருப்பவர். பஹத் பாசில் நடிப்பில் வெளிவந்த Maheshinte Prathikaaram படத்திற்காக தேசிய விருதையும் வாங்கி இருக்கிறார்.
இடுக்கி கோல்ட், கும்பலாங்கி நைட்ஸ், ஜோஜி உள்ளிட்ட பல முக்கிய மலையாள படங்களில் இவர் பணியாற்றியிருக்கிறார். பிரேமலு படத்தின் தயாரிப்பாளர்களில் இவரும் ஒருவர். சிறந்த திரைக்கதைக்கான விருதை பலமுறை இவர் வாங்கி இருக்கிறார். இந்நிலையில்தான் அன்பு-அறிவு இயக்கத்தில் கமல் நடிக்க போகும் புதிய படத்தில் இவர் இணைந்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது. இது கமல்ஹாசனின் 237வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
