மீண்டும் மீண்டுமா? அந்த நடிகையுடன் ஊர் சுற்றும் சிம்பு.. விரைவில் கல்யாணமா?

Silambarasan: நடிகர் சிலம்பரசன் மீண்டும் அந்த நடிகையுடன் ஊர் சுற்றி வருவதாக தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகிறது. ஆனால் இது குறித்து இரண்டு தரப்பும் இதுவரை எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் சிலம்பரசன். அப்பாவை போலவே நடிப்பு முதல் இயக்கம் வரை எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினார். கோலிவுட்டில் கொடிகட்டி பறக்க வேண்டிய சமயத்தில் நயன்தாராவுடன் காதலில் சிக்கி சினிமாவிலிருந்து சிறிது காலம் விலகி இருந்தார். அதுவும் பிரேக்கப்பில் முடிந்தது.

ஆனால் அதுவே அவருக்கு மிகப்பெரிய சரிவை உருவாக்கியது. விஜய் மற்றும் அஜித்திற்கு அடுத்த இடத்தில் இருந்த சிம்பு முன்னணி நடிகர் என்னும் அந்தஸ்தை பெறவே பெரும்பாடுபட்டார். அதைத் தொடர்ந்து நடிகை ஹன்சிகாவுடன் காதலில் சிக்கினார். இருந்தும் அந்த காதலும் சில காலத்தில் முறிந்தது.

இந்த இரண்டு காதலுமே நடிகர் சிலம்பரசனை முற்றிலும் முடக்கியது. ஒரு கட்டத்தில் அடையாளம் தெரியாத அளவு உடல்எடை ஏறினார். அவரால் திரும்பி மீண்டும் வர முடியாது என பலரும் கலாய்க்க தொடங்கினர். ஆனால் அதை எல்லாம் தட்டி விட்டு தன்னுடைய உடல் எடையை மீண்டும் குறைத்து மாநாடு என்னும் வெற்றி படத்தின் மூலம் கோலிவுட் தன்னுடைய அந்தஸ்தை தக்க வைத்தார்.

தற்போது தக்லைஃப் உள்ளிட்ட முக்கிய படங்களில் நடித்து வருகிறார். மீண்டும் சிலம்பரசன் கோலிவுட்டில் முக்கிய நடிகராக மாறி இருக்கும் இந்த நேரத்தில் நடிகை நிதி அகர்வாலுடன் காதலில் சிக்கி இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது. இருவரும் சில இடங்களில் ஒன்றாக ஊர் சுற்றி வருவதாகவும், இரு வீட்டாருமே இந்த காதலுக்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்னரே இருவருக்கும் காதல் என வதந்தி பரவிய நிலையில் அது குறித்து இரு தரப்புமே எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை. அது போலவே தற்போதும் இந்த வதந்தி பரவ தொடங்கி இருக்கும் நிலையில் திருமண அறிவிப்பு வருமா அல்லது இதை மறுப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Articles
Next Story
Share it