
Cinema News
Simbu Lokesh: லோகேஷும் சிம்புவும் ஒரே இடத்தில் Stay!.. என்னமோ நடக்குது…
இளம் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Leo, coolie ஆகிய இரண்டு படங்களாலும் அருக்கு இருந்த இமேஜில் இருந்து கீழே போய்விட்டார். ஏனெனில் இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. அதுவும் அவர் ரஜினியுடன் கூட்டணி அமைத்து கூலி படம் உருவானபோது அந்த படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு உண்டானது.
ஆனால் படமோ ரசிகர்களை அந்த அளவுக்கு திருப்தி படுத்தவில்லை. தமிழ் சினிமாவில் முதலில் ஆயிரம் கோடி வசூலிக்கும் படமாக கூலி இருருக்கும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் அதில் 50 சதவீதத்தை மட்டுமே இப்படம் வசூல் செய்தது. இது ரஜினி ரசிகர்களுக்கே ஏமாற்றமாக அமைந்தது.
அதேநேரம் ரஜினி மற்றும் கமல் இருவரும் பல வருடங்களுக்குப் பின் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்கிற அதிரடி செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் கூலி படத்தின் ரிசல்ட் ரஜினியின் மனதை மாற்றியிருப்பதாகவும் அது நடக்க வாய்ப்பில்லை எனவும் பலரும் சமூகவலைகளில் பேசினார்கள். விமானநிலையத்தில் இதுபற்றி செய்தியாளர்களிடம் ரஜினி பேசியபோதும் ‘இயக்குனர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை’ என சொல்லியிருந்தார்.
ஆனால் ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்குவது உறுதி அதற்கான வேலைகள் நடந்து வருகிறது என சொல்லப்பட்டது. இந்நிலையில்தான் தாய்லாந்தில் உள்ள புக்கெட் தீவுக்கு சென்றுள்ள லோகேஷ் அங்கு இப்படத்திற்கான கதையை எழுதி வருகிறாராம்.
இதில் ஆச்சரியம் என்னவெனில் அதே புக்கட் தீவுக்கு நடிகர் சிம்புவும் சென்றிருக்கிறார். தற்போது அங்குதான் அவரும் இப்போது தங்கி இருக்கிறார். எனவே இருவரும் அங்கு சந்திப்பார்களா, லோகேஷ் படத்தில் சிம்பு நடிப்பாரா என்றெல்லாம் ரசிகர்கள் யோசிக்க துவங்கிவிட்டனர்.
இந்த செய்தி வெளியே கசிந்திருப்பதால் லோகேஷ் அடுத்து இயக்கும் படத்தில் சிம்பு கேமியோவில் நடிக்கப்போகிறார் என்றெல்லாம் பலரும் கொளுத்தி போட வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.