வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிடுச்சா?!.. மீண்டும் வெடிக்கும் விவகாரம்!..
நடிகர் சிம்பு: குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகர் சிம்பு. தொடர்ந்து காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமான சிம்பு தொடர்ந்து பல ஹிட்டு திரைப்படங்களை கொடுத்திருக்கின்றார். ஆரம்ப காலகட்டத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
சர்ச்சையில் சிம்பு:
தொடர்ந்து சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்து வந்த சிம்பு இடையில் காதல் சர்ச்சைகளில் சிக்கி தனது பெயரை கெடுத்துக் கொண்டார். பிறகு படப்பிடிப்புக்கு நேரத்திற்கு வராமல் இருப்பது, தயாரிப்பாளர், இயக்குனர் போன்றவர்களுடன் பிரச்சனை என்று பல சர்ச்சைகள் இவரை சுற்றி வலம் வர தொடங்கியது. ஒரு கட்டத்தில் நடிகர் சிம்புவுக்கு நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. பின்னர் உடல் எடை அதிகரித்து இருந்த சிம்பு படத்தில் நடிக்க முடியாமல் கஷ்டப்பட்டார்.
மீண்டும் வந்த சிம்பு:
பல்வேறு பிரச்சனைகள் தன்னை சுற்றி வளம் வந்து கொண்டிருக்க மாநாடு திரைப்படத்தின் மூலமாக மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பினார் சிம்பு. தமிழ் சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கியவர் தொடர்ந்து அடுத்தடுத்து ஹிட் திரைப்படங்களை கொடுத்திருந்தார். இவர் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட திரைப்படங்கள் மிகப்பெரிய கொடுத்தது.
அடுத்ததாக மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைப் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும், அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடிக்க இருக்கின்றார்.
நடிகர் சிம்பு சில வருடங்களுக்கு முன்பு வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக கொரோனா குமாரு என்ற திரைப்படத்தின் நடிப்பதற்கு முடிவு செய்தார். இப்படத்தில் நடிப்பதற்காக சிம்புவுக்கு 9.5 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டது. அவருக்கு 4.5 கோடி ரூபாய் சம்பளம் முன் பணமாக கொடுக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு நடிப்பதற்கு பணத்தை பெற்றுக்கொண்டு கொரோனா குமார் படத்தை முடித்துக் கொடுக்காமல் இருந்து வந்து இருக்கின்றார்.
இதனால் ஐசரி கணேஷ் சிம்புவுக்கு நடிக்க தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரம் மிகப்பெரிய பிரச்சினையாக வெடித்திருந்த நிலையில் பின்னர் இருவரும் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு படத்தில் நடித்து கொடுப்பதற்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டவுடன் கேஸ் வாபஸ் வாங்கப்பட்டது.
தற்போது வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டிருக்கும் சிம்பு தனது சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தி இருக்கின்றாராம். இதை கேட்டு ஐசரி கணேஷ் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. மற்ற நடிகர்களுடன் தன்னை ஒப்பிட்டு சம்பளத்தை உயர்த்தி வரும் சிம்பு அவர்களை போல வருடத்திற்கு இரண்டு, மூன்று படங்களை கொடுக்கவில்லை என்றாலும் ஒரு படத்தையாவது கொடுத்துவிட்டு சம்பளம் கேட்டால் சரியாக இருக்கும் என்று சினிமா விமர்சனங்கள் கூறி வருகிறார்கள்.