
Cinema News
ஒரே நேரத்தில் 2 படம்!.. செமயா ஸ்கெட்ச் போட்ட சிம்பு!.. ஃபேன்ஸ்க்கு செம ட்ரீட் இருக்கு!…
STR49: முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தாலும் மற்ற நடிகர்களை போல தொடர்ந்து நடிக்கும் நடிகராக சிம்பு இல்லை. திடீரென்று ஒரு ஹிட் படம் கொடுப்பார். அதன்பின் இரண்டு தோல்வி படங்களை கொடுப்பார். அதன்பின் 2 வருடங்கள் காணாமல் போய்விடுவார். வெளிநாட்டுக்கு போய்விடுவார். ஆனாலும் அவரின் ரசிகர்கள் இன்னும் அப்படியே இருக்கிறார்கள். அதுதான் அவரின் பெரிய பலம்.
விண்ணைத்தாண்டி வருவாயா ஹிட்டுக்கு பின் சிம்பு நடிப்பில் வெளியான படங்கள் ஓடவில்லை. வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்த மாநாடு அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பின் அடுத்த இரண்டு படங்கள் ஓடவில்லை. மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் இணைந்து தக் லைப் படத்தில் நடித்தார். அந்த படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை.
சிம்புவின் 49 வது படத்தை பார்க்கிங் பட இயக்குனரும், 50வது படத்தை தேசிங்கு பெரியசாமியும், 51வது படத்தை டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவும் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. எனவே சிம்பு ரசிகர்கள் குஷியானார்கள். ஆனால் யார் கண் பட்டதோ!.. பார்க்கிங் பட இயக்குனருடன் துவங்கவிருந்த படம் நின்று போனது.
எனவே வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் அவரின் 49வது படமாக மாறி இருக்கிறது. இந்த படத்திற்கு அரசன் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது இந்நிலையில் அரசன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அசோக் மாரிமுத்து இயக்கவுள்ள படத்தில் சிம்பு நடிக்கப் போகிறார். இப்படி ஒரே நேரத்தில் இரண்டு படங்களிலும் அவர் மாறி மாறி நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் என சொல்லப்படுகிறது.
அஸ்வத் மாரிமுத்துவின் படம் சிம்புவின் 51வது படம் என்பதால் சிம்புவின் 50-வது படத்தை யார் இயக்கப் போகிறார் என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. அது தேசிங்கு பெரியசாமியா அல்லது வேறு இயக்குனரா என்பது விரைவில் தெரிந்து விடும்.