குறியீடுகளை போட்டு புலம்ப வைத்த சிம்பு! இதுவும் காத்திருப்பு பட்டியலா? அதுக்கா இவ்ளோ அக்கப்போரு?
இன்று மாலை சிம்புவின் புதிய பட அறிவிப்பு ஒன்று வெளியாக இருக்கிறது. அதற்கான முன்னறிவிப்பை நேற்று தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் சிம்பு தெரிவித்திருந்தார். dum+vallavan+manmathan+vtv= gen z பதிவிட்டு இருந்தார். அதுவும் குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களுக்கான படம் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இவர் பயன்படுத்திய இந்த குறியீடுகளைப் பற்றிய தகவல் தான் இப்போது வைரலாகி வருகின்றது. அதில் அவர் பயன்படுத்திய gen z என்பது ஜெனரேஷன் என்பதை குறிக்கிறதாம். z என்றால் zoomer என்று அர்த்தமாம். அதாவது 1995 ஆம் ஆண்டிலிருந்து 2010 வரைக்கும் பிறந்தவர்களை zoomerஎன்று குறிப்பிடுவார்களாம்.
அவர்கள் தான் எதை எடுத்தாலும் இணையதளத்தில் போட்டு ஜூம் பண்ணி பார்க்க கூடியவர்கள் என்பதை குறிப்பிடும் விதமாக அதில் சிம்பு குறிப்பிட்டு இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை டிராகன் படத்தை இயக்கும் அஸ்வத் தான் இயக்க இருக்கிறாராம்.
அவர் குறிப்பிட்ட தம், வல்லவன், மன்மதன் ,விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படங்களை எடுத்துக் கொண்டால் நான்கு படங்களிலும் விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார் சிம்பு. அந்த நான்கு கதாபாத்திரங்களும் ஒரே படத்தில் வரக்கூடிய படமாகத்தான் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இந்த படமாக அமையும் என சொல்லப்படுகிறது.
எப்போது ஆரம்பிக்கப்பட இருக்கிறது என பார்த்தால் அடுத்த வருடம் தான் இந்த படத்தின் படப்பிடிப்பே ஆரம்பிக்கப்படுகிறதாம். ஏனெனில் அஸ்வத் மாரிமுத்து டிராகன் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறாராம். அது முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் எல்லாம் முடிய இந்த வருடம் ஆகிவிடும் என தெரிகிறது.
அதனால் சிம்புவுடன் இணையும் அந்த படம் அடுத்த வருடம் தான் ஆரம்பிக்கப்படும் என சொல்லப்படுகிறது. அதற்குள் ஏன் இந்த அவசரமான அறிவிப்பு என்பது தான் யாருக்கும் தெரியவில்லையாம். ஏற்கனவே சிம்புவின் நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு வருடமாக எந்த ஒரு படங்களும் வெளியாகாத நிலையில் இந்தப் படமும் காத்திருப்பு பட்டியலில் தான் இருக்கப் போகிறது.