சிம்புவிடம் இப்படியொரு மாற்றமா?.. இளம் இயக்குனர்கள் தான் எஸ்டிஆரின் டார்கெட் போலயே!..

by Ramya |   ( Updated:2024-12-17 13:46:17  )
simbu1
X

simbu1

நடிகர் சிம்பு:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் சிம்பு. மாநாடு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சிம்புவின் கம்பேக் வேற லெவலில் இருந்து வருகின்றது. தொடர்ந்து ஆக்டிவாக படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகின்றார். மாநாடு திரைப்படத்திற்குப் பிறகு இவர் நடித்த வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பு கொடுத்தது.


அதனைத் தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தின் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். அப்படத்தின் படப்பிடிப்பு தயாரிப்பாளர் பிரச்சனை காரணமாக டேக்காப் ஆகாமல் இருந்து வருகிறது.

தக் லைப்:

நடிகர் சிம்பு தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைப் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்துவிட்டது. அடுத்த ஆண்டில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

யுவன் கச்சேரி:

சிங்கப்பூரில் நடத்திய இசைக்கச்சேரியில் சமீபத்தில் பாடியிருந்தார் நடிகர் சிம்பு. சிம்பு மற்றும் யுவன் சங்கர் ராஜா காம்போ என்றாலே ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். அந்த வகையில் சிங்கப்பூரில் நடந்த கச்சேரிக்கு ஏகபோக வரவேற்பு இருந்தது. சிம்புவின் பாடல்கள் அனைத்தையும் ரசிகர்கள் உற்சாகமாக கண்டுகளித்தார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

சிம்புவின் மாற்றம்:

நடிகர் சிம்பு மீது பலரும் வைக்கும் குற்றச்சாட்டு என்னவென்றால் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் சரியான நேரத்திற்கு நடிகர் சிம்பு வர மாட்டார் படப்பிடிப்புக்கும் சரியான நேரத்திற்கு வரமாட்டார் என்று கூறுவது உண்டு. ஆனால் இந்த இசை நிகழ்ச்சிக்கும், இசை நிகழ்ச்சியின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கும் சரியான நேரத்திற்கு வந்திருந்தாராம் நடிகர் சிம்பு. இது பலருக்கும் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்ததாக சினிமா விமர்சனங்கள் கூறி வருகிறார்கள்.

இளம் இயக்குனர் படங்கள்:

நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகர் சிம்பு கமிட்டாகி இருக்கின்றார்.


இப்படத்தை தொடர்ந்து பார்க்கிங் திரைப்படத்தின் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. அதாவது பார்க்கிங் திரைப்படத்தின் இயக்குனர் சிம்புவை சந்தித்து ஒன் லைன் கூறியிருந்ததாகவும், அது சிம்புவுக்கு பிடித்திருந்த காரணத்தால் முழு கதையையும் தயார் செய்யும்படி கூறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

Next Story