கமல் கழுத்தைப் பிடி... மணிரத்னம் போட்ட ஆர்டர்...! பிடித்ததும் மிரண்டு போன சிம்பு!

by SANKARAN |   ( Updated:2025-05-25 06:47:39  )
str, kamal, manirathnam
X

தக் லைஃப் படத்தின் ஆடியோ லாஞ்ச் நேற்று மாலை சென்னை சாய்ராம் காலேஜ்ல பிரம்மாண்டமாக நடந்தது. 9 பாடல்கள் ஏ.ஆர்.ரகுமானின் கைவண்ணத்தில் வெளியானது. விழாவில் சிம்பு கமலைப் பற்றிப் பேசும்போது படத்தில் உள்ள ஒரு காட்சியைப் பற்றிச் சொல்லணும்னு மணிரத்னமிடம் மேடையிலேயே அனுமதி வாங்கிக் கொண்டார். அதாவது ஒரு காட்சியில் கமலின் கழுத்தை இறுக்கிப் பிடிப்பார்.

அப்போது கமலும் ஒரு ரியாக்ஷன் கொடுப்பார். அதை டிரெய்லரில் நாம் பார்த்திருப்போம். அந்தக் காட்சியில் கமல் எவ்ளோ பெரிய ஜீனியஸ். நாம போய் அப்படி எல்லாம் நடிக்கிறதா என்று சிம்பு தயங்கினாராம். அதனால் கழுத்தை மெதுவாகப் பிடிப்பது போல பாவனை செய்துள்ளார். அதை தெரிந்து கொண்ட மணிரத்னம் கட் சொல்லி விட்டு நல்லா பண்ணுங்கன்னு சொன்னாராம்.

அதன்பிறகு சற்றே இறுக்கிப் பிடிப்பது போல பாவனை செய்துள்ளார். அதுவும் சரியாக வரவில்லை. அதன்பிறகு மணிரத்னம் வேறு பிரஷர் கொடுக்காரு. கமலிடம் சார் கொஞ்சம் வேகமா பிடிக்கிறேன். தப்பா நினைக்காதீங்கன்னு அனுமதி வாங்கி விட்டு சிம்பு அந்தக் காட்சியில் நடித்தாராம். அப்போது காட்சி ஓகே. ஆனது. ஆனால் கமல் கொடுத்த அந்த ரியாக்ஷனில் சிம்பு மிரண்டு போனாராம். அப்படி என்ன நடந்ததுன்னு அவரே சொல்லக் கேட்போம்.

கமல் சார் பத்திப் பேசணும்னா நிறைய பேசிக்கிட்டே இருக்கலாம். நாம அவரைக் குருவா நினைக்கிறோம். ஆனா நான் இன்னும் ஸ்டூடண்ட்னு சொல்றாரு. ஆனாலும் நாம திறமையான அந்த ஸ்டூடண்ட்கிட்ட கத்துக்குவோம்.


ஒரு சீன்ல மழையில நனைஞ்சிக்கிட்டு கமல் சார் மாதிரி நான் அவரை இமிடேட் பண்ணிப் பேசணும். கமல் சார் முன்னாடியே பண்ணனும். அப்போ எனக்கு பயமா இருந்தது. அப்போ மணி சார், கமல் சார் சொன்ன பிறகு நான் நடிச்சேன். கமல் சார் கழுத்தைப் பிடிக்கிற மாதிரி ஒரு ஷாட். என்ன பண்றதுன்னே தெரியல. கமல் சார் கழுத்தை அழுத்திப் பிடிங்கன்னு மணி சார் சொன்னாரு. நான் கொஞ்சம் பவர் கொடுத்து பிடிச்சேன். அப்போ அவர் 'கட் கட் 'னு சொல்லி மணி சார் கண்டுபிடிச்சிட்டாரு.

அடுத்தவாட்டியும் எதுவும் சொல்லிடக்கூடாதுன்னு கமல் சார்கிட்ட பர்மிஷன் கேட்டு அழுத்திப் பிடிச்சிட்டேன். அப்போ கமல் சார் என்னவோ பண்றாரு. என்ன நமக்கு ரியாக்ட் பண்றாரான்னு பயம் வந்தது. இல்ல பர்ஃபார்ம் பண்றாரான்னு தெரியல. அப்புறம் மணி சார் 'ஓகே. ரொம்ப நல்லா வந்தது'ன்னாரு. கமல் சார் உங்க கேரக்டரை சூப்பரா பர்ஃபார்ம் பண்ணனும்னு எனக்கு தன்னம்பிக்கைக் கொடுத்தாரு. அவரு கூட சமமா நடிக்குற வாய்ப்பையும் எனக்குக் கொடுத்துருக்காரு. அதனாலதான் என்னால அப்படி நடிக்க முடிஞ்சது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story