1. Home
  2. Cinema News

அனுமனை ஆட்கொண்ட ஜாம்பவானாக சிம்புவுக்கு வெற்றிமாறன்.. எல்லாரும் ரெடியா இருங்க

simbu
ஹைப் ஏத்தும் சிம்பு வெற்றிமாறன் கூட்டணி.. காத்திருந்தவருக்கு அடித்த ஜாக்பாட்
 

இப்போது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருப்பது அரசன் திரைப்படம் தான். சிம்பு வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகப் போகும் இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ சமீபத்தில் ரிலீஸ் ஆகி அமோக வரவேற்பினை பெற்று வருகிறது. ரசிகர்கள் இந்த ப்ரோமோவுக்காக தான் பல நாட்களாக காத்திருந்தனர். இதற்கிடையில் இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 ஒரு மிரட்டலான புரோமோவாக ரசிகர்கள் இதை பார்க்கின்றனர்.. இதனுடைய புகைப்படம் ஆரம்பத்தில் வெளியானது. ஒரு கோர்ட் வாசலில் நெல்சனிடம் சிம்பு பேசுவது மாதிரி அந்த ஒரு புகைப்படம் வெளியானது. அதுவே ஒரு பெரிய ஹைப்பை உருவாக்கியது. அதன் பிறகு இந்த வீடியோ எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு அதனுடைய ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை மிரட்டி வருகிறது.

வெற்றிமாறன் படம் என்றாலே அதில் ஏதாவது ஒரு ஆழமான கதை இருக்கும். தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி எப்பேர்பட்ட வரவேற்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது என அனைவருக்குமே தெரியும். அந்த வகையில் சிம்பு வெற்றிமாறன் கூட்டணி எந்த அளவு ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என அனைவருமே காத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் சிம்பு மேல் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.

சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வர மாட்டார். குறித்த நாளில் படத்தை முடித்துக் கொடுப்பதற்கு ஒத்துழைக்க மாட்டார். அவருடைய உடல் பற்றிய அக்கறையும் அவருக்கு கிடையாது. இப்படியான குற்றச்சாட்டுகள் அவர் மேல் இருந்தன. அதுவே சிம்புவை இயக்கிய இயக்குனர்கள் சொன்ன பாராட்டுகளை பார்க்கும் பொழுது சிம்புவிடம் ஒரு காட்சியை விளக்கி விட்டால் போதும். ரீடேக் என்கிற பேச்சுக்கு இடம் இருக்காது .

அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். அஜித் கமல் சரத்குமார் சூர்யா போன்ற ஆகப்பெரும் நட்சத்திரங்களை வைத்து படங்களை எடுத்த கௌதம் வாசுதேவ் மேனன் வியந்து போற்றும் ஒரே நடிகர் சிம்பு தான். மாநாடு திரைப்படத்தில் ஒரு காட்சியில் சிம்புவை கட்டி வைத்து ஒய் ஜி மகேந்திரனிடம் பேசுவது மாதிரியான காட்சி இருக்கும் .சில நிமிடங்கள் நீளும் அந்த காட்சியில் சிம்பு கட் செய்யாமலேயே அந்த சீன் முழுக்க பேசி இருப்பார்.

அந்த அளவுக்கு ஒரு ஸ்டார் டம் இருக்கிறது. அந்த ஸ்டார் டம் உள்ளே அமுக்கப்பட்டு இருக்கிற ஒரு ஆகப்பெரும் நடிகன் தான் சிம்பு. அவருக்குள் ஒரு பெர்பார்மர் இருக்கிறார். வானம் தொட்டி ஜெயா கோவில் மாநாடு போன்ற படங்கள் சிம்பு என்ற நடிகனை வெளிக்கொண்டு வந்த திரைப்படங்கள் ஆகும். ராமாயணத்தில் அனுமனுக்கு தன்னுடைய பலம் தெரியாது. ஒரு தடவை ஜாம்பவான் எனும் கதாபாத்திரம் அனுமன் முன்னாடி தோன்றி அதனுடைய பராக்கிரமத்தை சொல்ல ஆரம்பித்து விட அனுமன் தன் முழு பலத்தோடு அண்டத்தையும் ஆள கிளம்பி விடுவான்.

 அந்த மாதிரி வெற்றிமாறன் என்னும் ஜாம்பவான் இப்போது அனுமன் முன்னே நிற்கிறார். அதனால் சிம்புவின் பலம் என்ன என்பது கூடிய சீக்கிரம் தெரிய வரும் என சோசியல் மீடியாக்களில் சிம்புவை பற்றி ஆஹா ஓஹோ என பாராட்டி வருகிறார்கள்.

கட்டுரையாளர்கள்