விஜய் கூட 50வது படம் எஸ்கே கூட 100வது படமா!.. ஜிவி பிரகாஷுக்கு எப்படி அமைஞ்சிருக்கு பாருங்க!..

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய ஜிவி பிரகாஷ் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருக்கின்றார். வெயில் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, ஆடுகளம் என பல படங்களில் மிகச்சிறந்த இசையை கொடுத்து சிறந்த இசையமைப்பாளராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் ஜிவி பிரகாஷ்.
அதனைத் தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமான ஜிவி பிரகாஷ் பெரியளவு ஹிட்டு கொடுக்கவில்லை. இவரின் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் படுதோல்வியை சந்தித்து இருக்கின்றது. இசையமைப்பாளராக ஜொலித்து வந்த ஜிவி பிரகாஷுக்கு படங்கள் எதிர்பார்த்து அளவிற்கு வரவேற்பை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.
படங்களில் ஒரு பக்கம் நடித்துக் கொண்டிருந்தாலும் மற்றொருபுறம் இசையமைப்பதிலும் கவனம் செலுத்தி வருகின்றார். அந்த வகையில் கடந்த ஆண்டு இவரது இசையில் வெளிவந்த இரண்டு திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. கடந்த தீபாவளி பண்டிகைக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த அமரன் திரைப்படமும் தெலுங்கில் துல்கர் சல்மான் நடிப்பில் வந்த லக்கி பாஸ்கர் திரைப்படமும் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.
இதனால் தொடர்ந்து அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் இசையமைப்பதற்கு வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. தற்போது நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தில் இசையமைத்து வருகின்றார். அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கின்றார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஜிவி பிரகாஷ் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதாவது சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தில் நான்கு பாடல்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்துமே மிகச் சிறப்பாக வந்திருக்கின்றது. அதில் மூன்று பாடலாவது பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் என்று கூறி இருக்கின்றார்.
மேலும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் இசையமைப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி என்றும் அவர் பேசியிருந்தார். விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் திரைப்படங்களில் இசையமைத்ததில் ஒரு ஒற்றுமை இருக்கின்றது. அதாவது இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி திரைப்படம் ஜிவி பிரகாஷ் இசையமைத்த 50வது திரைப்படம் ஆகும்.
அதனைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படம் ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 100வது திரைப்படம் ஆகும். இந்த ஒற்றுமையை ரசிகர்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.