அப்படி சொன்ன நடிகரோடு மீண்டும் நடிப்பீங்களா? சிம்ரன்கிட்ட இருந்து இப்படியொரு பதிலா?

simran
தமிழ் சினிமாவில் 90 கள் காலகட்டத்தில் ஒரு டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது கெரியரை ஆரம்பித்த சிம்ரன் நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் தனது முதல் சினிமா அறிமுகத்தை உறுதி செய்தார். ஆனால் அவர் நடிப்பில் வெளியான முதல் திரைப்படம் ஒன்ஸ்மோர். இந்த படத்தில் தன்னுடைய கவர்ச்சி, ஸ்டைல் ,அழகு என மொத்தத்தையும் காட்டி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் குடிபோனார் சிம்ரன்.
அதைத்தொடர்ந்து அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் இவர்தான் ஹீரோயின். விஜய் அஜித் பிரபுதேவா பிரசாந்த் முரளி விஜயகாந்த் என எல்லா நடிகர்களின் படங்களிலும் சிம்ரனை நம்மால் பார்க்க முடிந்தது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் மக்களின் ராணியாக திகழ்ந்தார் சிம்ரன். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்த சிம்ரனை யாராலும் அந்த காலத்தில் தொட முடியவில்லை.
இவர்தான் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். அதன் பிறகு திருமணம் செய்துகொண்டு குடும்பம் குழந்தை என செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் நடிப்பை தொடங்கினார். குணச்சித்திர கேரக்டரில் நடித்தார். வில்லியாகவும் நடித்தார். இருந்தாலும் 90கள் காலகட்டத்தில் இருந்த மாஸ் அவருக்கு கிடைக்கவில்லை.
அதன் பிறகும் கொஞ்சம் பிரேக் எடுத்தார். பேட்ட திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தனது செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்தார். அதன் பிறகு இப்போது அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் சிம்ரன். சமீபத்தில் அவர் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றது. அதில் ஒரு சிறிய கதாபாத்திரம் என்றாலும் படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த மக்களுக்கு சிம்ரனின் தாக்கம் போகவில்லை.
அந்த அளவுக்கு அவருடைய கதாபாத்திரம் அனைவர் நெஞ்சங்களிலும் பதிந்தது. இந்த நிலையில் அவருடைய பேட்டி ஒன்று இப்போது வைரல் ஆகி வருகிறது. அவரிடம் தொகுப்பாளர் ஒருவர் உங்களுடன் ஏற்கனவே நடித்த ஒரு கோ ஸ்டார். அவர் உங்களைப் பற்றி முன்னதாக கடுமையான வார்த்தைகளால் சில விஷயங்களை கூறியிருக்கிறார். அவருடன் மீண்டும் நடிக்க கூடிய ஒரு வாய்ப்பு வருகிறது. நீங்கள் அந்த படத்தை கமிட் செய்வீர்களா என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

simran
அதற்கு சிம்ரன் ஏன் முடியாது? கண்டிப்பாக நடிப்பேன். ஏனெனில் அந்தப் படத்தின் கதை நன்றாக இருக்கிறது. அதில் நடிக்கும் நடிகர் ஏற்கனவே என்னுடன் நடித்த நடிகராக இருந்தாலும் ஏன் அதை நான் ஒப்புக் கொள்ளக் கூடாது. ஆனால் எங்களுக்குள் இருக்கும் ரிலேஷன்ஷிப் கொஞ்சம் பிரேக் ஆகலாம். ஆனால் அதை மீண்டும் அந்தப் படத்தின் மூலம் நான் திரும்ப கொண்டு வருவேன் என சிம்ரன் அந்த கேள்விக்கு தரமான பதிலை கொடுத்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய கமெண்டில் இப்படி ஒரு பெண்மணியா இப்படி ஒரு நடிகையா என சிம்ரனை பாராட்டி வருகிறார்கள்.