பழசெல்லாம் மறந்து போச்சா!.. அஜித் சொன்னது உண்மையில்லை!.. கிழிக்கும் பிரபலம்..

by Murugan |
பழசெல்லாம் மறந்து போச்சா!.. அஜித் சொன்னது உண்மையில்லை!.. கிழிக்கும் பிரபலம்..
X

கோலிவுட்டில் முக்கியமான நடிகராக இருப்பவர் அஜித். 1993ம் வருடம் வெளியான அமராவதி திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார். ஒரு கட்டத்தில் மாஸ் நடிகராகவும் மாறினார். விஜயை போலவே இவருக்கும் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.

ஆதிக் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் ஹிட் அடித்தது. அடுத்து மீண்டும் ஆதிக் இயக்கத்தில் அஜித் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் ஷுட்டிங் வருகிற அக்டோபர் மாதம் துவங்கவுள்ளது. அஜித் சினிமாவிற்கு வந்து 33 வருடங்கள் முடிந்துவிட்ட நிலையில் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

அதில் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன அஜித் ’நான் யாருடைய சிபாரிசிலும் சினிமாவிற்கு வரவில்லை. முழுக்க முழுக்க என்னுடைய முயற்சியால் மட்டுமே சினிமா துறையில் நுழைந்தேன்’ என சொல்லிருந்தார். மேலும் என்னுடைய ரசிகர்களை என் சுயநலத்திற்காக பயன்படுத்த மாட்டேன் எனவும் குறிப்பிட்டிருந்தார்.


இந்நிலையில் இதுப்பற்றி கருத்து தெரிவித்த சினிமா செய்தியாளர் வலைப்பேச்சி பிஸ்மி ‘அஜித் அறிமுகமான தெலுங்கு படம் பிரேம புஸ்தகம். இந்த படத்தில் அவருக்கு வாய்ப்பு வாங்கி தந்தது பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அமராவதி படத்திலும் வேறு ஒரு நடிகரை ஒப்பந்தம் செய்துவிட்டார்கள். பத்து நாட்களில் ஷுட்டிங் துவங்கவிருந்த நேரத்தில் இயக்குனரிடம் அஜித்தை பற்றி சொல்லி அப்படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தந்தது எஸ்.பி.பி-தான்.

அதேபோல் இயக்குனர் வஸந்த் ஆசை படத்தில் எஸ்.பி.பியின் மகன் சரணை நடிக்க வைக்க முடிவெடுத்தார். ஆனால் ‘சரணுக்கு இப்போதுதான் திருமணம் ஆகியுள்ளது. அவன் நடிக்க வரமாட்டான். இந்த கதைக்கு அஜித் பொருத்தமா இருப்பான் என சொல்லி அந்த வாய்ப்பையும் வாங்கி தந்தது எஸ்.பி.பி. தான். இதையெல்லாம் மறந்துவிட்டு நான் யாருடைய சிபாரிசிலும் வரவில்லை என அஜித் சொல்லியிருப்பது தவறு’ என கூறியிருக்கிறார்.

அஜித்தும், எஸ்.பி.சரணும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். இருவரும் நண்பர்கள். அந்த முறையில்தான் அஜித்திற்கு எஸ்.பி.பி சினிமா வாய்ப்புகளை வாங்கி தந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story