ரோகிணிக்கு அடுத்தடுத்த சிக்கல்… பிரச்னை வெடிக்கதான் மாட்டிங்குதே!..

by Akhilan |
siragadikka aasai
X

Siragadikka Aasai: பிரபல தொடரான சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டுக்கான தொகுப்புகள்.

முத்து நண்பர்களுடன் சேர்ந்து குடிக்க மீனாவிடம் பெர்மிஷன் கேட்க அவர் முடியாது என மறுத்துவிடுகிறார். இருந்தும் முத்து கொடுத்து விட்டது போல பில்டப் கொடுக்க செல்வம் அப்படியெல்லாம் தங்கச்சி கொடுத்துவிடாதே எனக் கூற அதான் தெரிதுல என முத்து செல்வத்தை சமாளிக்கிறார்.

ரோகிணி மற்றும் மனோஜ் பேசிக்கொண்டு இருக்கின்றனர். ரோகிணி பாத்ரூம் செல்ல போன் வருகிறது. அதை மனோஜ் எடுத்து பேச என்ன இப்பலாம் வாடகை லேட் ஆகுது. அஞ்சாம் தேதி கொடுக்கணும் எனக் கூற மனோஜ் யார் நீங்க எனக் கேட்கிறார். நான் பெருங்களத்தூர் வீட்டு ஓனர் பேசுவதாக கூறுகிறார்.

ரோகிணி வர அவரிடம் யாரை பெருங்களத்தூரில் குடி வச்சிருக்க எனக் கேட்க ரோகிணி என்னுடைய தோழிக்கு உதவி செய்றேன். நீ ஏன் என் போனை கேட்காம எடுத்த என சத்தம் போடுகிறார். நீ சொல்லாம என்கிட்ட மறச்சது தப்பு எனச் சொல்ல இருவரும் மாத்தி மாத்தி சண்டை போட்டுக்கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் ரோகிணி மன்னிப்பு கேட்காமல் கோபப்பட மனோஜ் வெளியில் சென்று விடுகிறார்.

முத்து குடித்துவிட்டு வர கொய்யா என்ன சாப்பிடுறீங்க எனக் கேட்க பிரியாணி என்கிறார். ஊதுங்க என ஊதியதும் சரக்கு அடித்ததை கண்டுபிடித்து தள்ளி சென்று விடுகிறார். உடனே முத்து செல்வத்துக்கு கால் செய்து கொய்யா இலையை சாப்பிட்டா கண்டுபிடிக்க முடியாதுனு சொன்ன மீனா கண்டுபிடிச்சிட்டா என்கிறார்.

உங்களுக்கு நல்ல சகவாசமே இல்ல. குடிக்காரனோட சேர்ந்ததுதான் பிரச்னை என மீனா திட்ட முத்து என் பிரண்ட் பற்றி பேசாதே என கோபித்துக்கொண்டு மாடிக்கு செல்கிறார். ரவியை ஸ்ருதி போனை எடுக்காததற்கு திட்டிக்கொண்டு இருக்கிறார். அதில் கடுப்பான ரவியும் மாடிக்கு சென்று விடுகிறார்.

மூவரும் மாடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டு என்ன சண்டை எனச் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். தொடர்ந்து மனோஜ் பேசாம டைவர்ஸ் பண்ணிட்டா மறுபடியும் பேச்சிலர் ஆகலாம் எனக் கூற ரவி மற்றும் முத்து அவரை முறைக்கின்றனர்.

Next Story