அஜித், ரஜினி, சூர்யா வச்சி படமெடுத்தும் நோ யூஸ்!.. சிறுத்தை சிவாவின் புதிய பட அப்டேட்!...
சில தெலுங்கு படங்களில் ஒளிப்பதிவாளராக வேலை செய்தவர் சிவா. சிறுத்தை படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் கொடுத்து சிறுத்தை சிவாவாக மாறினார். அடுத்து அஜித்துக்கு கதை சொல்லி வீரம் படத்தை எடுத்தார். அந்த படமும் ஹிட். சிவாவுடன் வேலை செய்வது அஜித்துக்கு மிகவும் பிடித்துப்போக தொடர்ந்து அவரின் இயக்கத்தில் வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்தார். இதில் விவேகம் படத்தை தவிர மற்ற படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் அடித்தது.
விஸ்வாசம் படத்தைப் பார்த்த ரஜினி சிவாவை அழைத்து ‘தனக்கு ஏதேனும் கதை இருக்கிறதா?’ என கேட்க அண்ணாத்த படம் உருவானது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சினிமாவில் ஹிட் கொடுத்தால் மட்டுமே நடிகர்கள் அழைத்து பேசுவார்கள். அதே படம் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தால் கண்டு கொள்ள மாட்டார்கள். இது சிவாவுக்கும் நடந்தது.
ஆனாலும் அஜித்தின் குட் புக்கில் சிவா இருப்பதால் சூர்யா அவரை அழைத்து பேசி கங்குவா படம் உருவானது. கோலிவுட்டில் ஒரு ஹாலிவுட் படமாக கங்குவா உருவானது. இந்த படத்திற்காக கடுமையான உழைப்பை போட்டிருந்தார் சூர்யா. ஆனாலும் படத்தின் கதை, திரைக்கதை மற்றும் காட்சிகள் ரசிகர்களை ஈர்க்கவில்லை. எனவே இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்தது. அதோடு இந்த படத்துக்கு பெரிய பில்டப் செய்து புரமோஷன் செய்யப்பட்டதால் படம் வெளியான பிறகு படத்தை பலரும் ட்ரோல் செய்தார்கள்.
கங்குவா படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டிருந்தார் சிவா. ஆனால் முதல் பாகமே தோல்வி என்பதால் அது கைவிடப்பட்டது.கங்குவா படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியும் சிவா அடுத்து எந்த நடிகரை வைத்து படமெடுக்கப்போகிறார் என்கிற தகவல் வெளியாகவில்லை. அவரும் பல நடிகர்களிடம் கதை சொல்லி பார்த்தார். ஆனால் சரியான ரெஸ்பான்ஸ் இல்லை. ஒரு வழியாக தற்போது சிவாவின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள். கங்குவா படத்தை தயாரித்த ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வேறொரு நிறுவனத்தின் பெயரில் படத்தை மினிமம் பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
