சிவாஜி வீட்டில் இப்படி ஒரு ஹேண்ட்ஸம்மான ஹீரோவா? சத்தமே இல்லாம முடிச்சுட்டாங்களே

by ROHINI |
sivaji
X

sivaji

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனம் சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம். அந்த படம் தற்போது கைவசம் இரண்டு படங்களை தயாரித்து வருகிறது. விஜய் சேதுபதி நடிப்பில் தலைவன் தலைவி என்ற திரைப்படத்தையும் விஷ்ணு விஷால் நடிப்பில் இரண்டு வானம் என்ற படத்தையும் தயாரித்து வருகிறார்கள். இதற்கு இடையில் இன்னொரு படத்தையும் எடுத்து முடித்து விட்டதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

சிவாஜி கணேசனின் மூத்த மகனான ராம்குமாரின் இளைய மகன் தர்ஷன். இவர் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்போது எடுத்து முடித்திருக்கிறதாம். இந்த படத்தில் கங்கை அமரன், ரோஜா போன்ற பல நடிகர்கள் நடித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் சிவாஜி கணேசனின் வீட்டில் ஏற்கனவே பிரபு 90கள் காலகட்டத்தில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்தார் .

அதற்கு அடுத்தபடியாக அவருடைய மகன் விக்ரம் பிரபு சொல்லும் படியான சில நல்ல கதைக்களம் உடைய படங்களில் நடித்து வந்தார். இதில் மூத்த மகன் ராம்குமாரின் மகனான துஷ்யந்த் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து இன்னொரு படத்தை தயாரித்தார். அதில் அவருக்கு பல கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு அந்த ஒரு பிரச்சனை தான் சமீபத்தில் சிவாஜியின் வீடு ஜப்தி வரைக்கும் சென்றது.

dharsan

dharsan

இதில் ராம்குமாரின் இரண்டாவது மகன் தர்ஷன் இப்போது சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகிறார். இவரை பற்றி குறிப்பிடும் பொழுது சிவாஜியின் வீட்டில் ஒரு ஹேண்ட்ஸ்மான ஹீரோ என்றால் அது இந்த தர்ஷன் தான் என்றும் இவரை படங்களில் அறிமுகப்படுத்த எத்தனையோ தயாரிப்பாளர்கள் முயன்றதாகவும் கடைசியில் சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தான் இவரை அறிமுகம் செய்திருக்கிறது என்றும் சொல்கிறார்கள். இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

Next Story