அமரன் ஹிட்டுதான்.. அதுக்காக இப்படியா?! எஸ்.கே. கேட்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?!..

by Murugan |
sivakarthikeyan
X

sivakarthikeyan

Sivakarthikeyan: விஜய் டிவியில் ஆங்கராக இருந்து சினிமாவில் நுழைந்து ஹிட் படங்களை கொடுத்து குறுகிய காலகட்டத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறியவர் இவர். இவரின் வளர்ச்சியை பார்த்து பல வருடங்களாக நடித்துக்கொண்டிருக்கும் பல நடிகர்களும் பொறாமைப்பட்டார்கள். இதை அஜித்தே சிவகார்த்திகேயனிடம் கூறினார்.

ஹிட் படங்களை கொடுத்தாலும் சொந்தமாக படமெடுத்து பல கோடிகள் கடனாளியாகவும் மாறினார். இதனால் அவரின் ஒவ்வொரு படமும் வெளியாகும் போதும் பஞ்சாயத்து நடக்கும். சம்பளத்தை விட்டுக்கொடுத்தோ, கையிலிருந்து சில கோடிகளை கொடுத்தோ அல்லது ஒரு புதிய படத்தில் நடிப்பதாக சொல்லி அதற்கு சம்பளம் வாங்கி அதை கொடுத்தோ படத்தை ரிலீஸ் செய்து வந்தார்.

தற்போது எல்லா கடனிலிருந்தும் மீண்டு வந்துவிட்டார். ராஜ்குமார் இயக்கத்தில் அவர் நடித்து வெளியான அமரன் படம் சூப்பர் ஹிட் அடித்து 300 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து தீவிரவாதிகளுடன் சண்டை போடும்போது மரணமடைந்தார்.


அவரின் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களை மையமாக கொண்டு இப்படத்தின் திரைக்கதையை எழுதியிருந்தார் ராஜ்குமார். இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று 4 வாரங்களுக்கும் மேல் நல்ல வசூலை பெற்றது. படம் வெளியாகி 50 நாட்கள் ஆகியும் இன்னமும் சில தியேட்டர்களில் இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஒரு நடிகரின் சம்பளம் என்பது அவர் நடித்து வெளியான முந்தைய படத்தின் வியாபாரத்தை பொறுத்தே தீர்மானிக்கப்படும். இதற்கு முன் 25 அல்லது 30 கோடி சம்பளம் வாங்கி கொண்டிருந்தார் எஸ்.கே. அமரன் ஹிட்டுக்கு பின் 50 கோடி என செய்திகள் வெளியானது. ஆனால், அவர் அதையும் தாண்டி 70 கோடி கேட்பதாக சொல்லப்படுகிறது.

இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில், ஜெயம் ரவி, அதர்வா ஆகிய நடிகர்கள் இருப்பதால் சம்பளம் கண்டிப்பாக பிரித்தே கொடுப்பார்கள். ஆனால், அடுத்து டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்திற்கு 70 கோடியை அவர் சம்பளமாக கேட்பதாக சொல்லப்படுகிறது. அப்படிபார்த்தால் விஜய், அஜித், ரஜினி, கமலுக்கு பின் சிவகார்த்திகேயனுக்கே அதிக சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story