சிவகார்த்திகேயன் படத்தில் மல்லு ஹீரோ… இது நடந்தா நல்லாவா இருக்கும்?..
Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாக இருக்கும் படத்தில் பிரபல மலையாள நடிகர் ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணியில் இருக்கும் நடிகராக மாறி இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.
முதல் சில படங்களிலேயே அவருக்கான ரசிகர்கள் வட்டம் அதிகரித்தது. தொடர்ந்து மிகப்பெரிய கமர்சியல் ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் மினிமம் கேரன்ட்டி படங்களை கொடுத்து தன்னை தக்க வைத்துக்கொண்டு வந்தார்.
தொடர்ந்து தயாரிப்பில் கவனம் செலுத்தி வரும் சிவகார்த்திகேயன் தன்னுடைய படங்களை ரிலீஸ் செய்யும் வரை அந்த தயாரிப்பாளர் உடன் கடைசி வரை துணை நிற்பது அவருக்கு கோலிவுட்டில் நல்ல வளர்ச்சியை கொடுத்தது.
அது மட்டுமில்லாமல் சமீபத்தில் வெளியான கோட் திரைப்படத்தில் விஜய் அவருக்கு கொடுத்த துப்பாக்கி காட்சி விஜய் ரசிகர்களிடம் அவருக்கு என ஒரு அடையாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறது. இந்த எதிர்பார்ப்புடன் அவரின் அமரன் திரைப்படம் ரிலீஸிருக்கு தயாராகிவிட்டது.
அக்டோபர் 31ஆம் தேதி ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி இருக்கும் அமரன் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் எடுத்து வருகிறார்.
தற்போது 100 கோடி பட்ஜெட்டில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் லோகேஷ் கனகராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கும் நிலையில் நடிகர் துல்கர் சல்மானிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.
புறநானூறு திரைப்படத்தைப் போலவே இப்படத்திலும் துல்கரும் முக்கிய வேடம் ஏற்க இருப்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இது குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.