SK-வின் புறநானூறு... டாடா காட்டிய லோகி... 'நயன்தாராவின் தம்பி'க்கு அடிச்ச லாட்டரி...?

தமிழ் சினிமாவில் மெரினா என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாகி அடுத்து ஒரு சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இன்று தமிழில் ஒரு முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக தனது திரை வாழ்க்கையை தொடங்கிய இவருக்கு தற்போது மிகப்பெரிய வரவேற்பு இருக்கின்றது .

தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்த இவருக்கு அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. தற்போது அமரன் என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படத்தில் ஒரு ராணுவ அதிகாரியாக நடித்திருக்கின்றார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கும் இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கின்றார். அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகின்றார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் திரைப்படம் என்பதால் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கின்றது. இந்நிலையில் சுதா கொங்காராவுடன் சிவகார்த்திகேயன் புறநானூறு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

அதாவது சுதா கொங்கரா நடிகர் சூர்யாவை வைத்து இயக்க இருந்த திரைப்படம் புறநானூறு. சில பல காரணங்களால் அப்படத்திலிருந்து சூர்யா விலகிய நிலையில் சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகி இருக்கின்றார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியிருந்தது. முதல் முறையாக இந்த திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகையான ஸ்ரீ லீலா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கின்றார்.

மேலும் அவரின் சகோதரராக முதலில் லோகேஷ் கனகராஜ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில் அவருக்கு பதிலாக தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் முரளியின் மகனான அதர்வா முரளி இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

தமிழ் சினிமாவில் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் சொல்லும் அளவுக்கு ஹிட் திரைப்படங்களை கொடுக்கவில்லை. இருப்பினும் ஒரு முன்னணி நடிகராக வரவேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றார். இவர் இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் நயன்தாராவுக்கு தம்பியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ramya
ramya  
Related Articles
Next Story
Share it