Sivakarthikeyan: சிவகார்த்திகேயனின் இணைய கூலிப்படைகள் செய்யும் அட்டகாசம்..
Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் நடிகர் என்றாலும் அவருக்கு எப்படி வளர வேண்டும் எதையெல்லாம் செய்யலாம். செய்யக்கூடாது என்பது தெளிவாகவே தெரியும். அதிலும் எந்த நடிகரை இறக்கினால் தான் ஏறலாம் என்பதும் அவருக்கு தெரியும் என்பதை சமீபத்திய விஷயம் சொல்லிவிடுகிறது.
சிவகார்த்திகேயனின் வளர்ச்சி
சின்னத்திரையில் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சிக்குள் வந்தவர் சிவகார்த்திகேயன். அந்த நிகழ்ச்சியின் டைட்டிலை தட்டி தூக்க அதன்பின்னர் விஜய் டிவியில் தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வந்தார். பல பிரபல நிகழ்ச்சிகளில் முகம் காட்ட சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது.
இந்த பிரபலத்தை வைத்துக்கொண்டு விஜய் டிவியில் தன்னுடைய முகத்தை தெளிவாக பதிய வைத்தார். அதன் பின்னர் அவருக்கு மூன்று படம் மூலம் பெரிய திரையில் வாய்ப்பு கொடுத்தால் தனுஷ். அதிலும் தன்னால் முடிந்த அளவு ஸ்கோர் செய்து இருந்தார்.
பின்னர் சினிமாவில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு ஹீரோவாக நடித்த அதிர்ஷ்டவசமாக ஆரம்ப கட்டப் படங்கள் எல்லாம் வெற்றியாக அமைந்து சிவகார்த்திகேயனை சரியாக கோலிவுட் தூக்கி விட்டது என்பதுதான் பலரின் எண்ணம்.
ஆனால் சிவகார்த்திகேயன் தன்னுடைய ஆரம்ப கட்டத்திலிருந்து மீடியா வெளிச்சத்தை விட முடியாமல் தனக்கான ஒரு கூட்டத்தை அமைத்து தன்னைக் குறித்து பாசிட்டிவான விஷயங்களை பிரச்சாரம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
எஸ்கேவின் ஆன்லைன் பிரச்சாரம்
- தன்னுடைய படங்களின் ரிலீஸின் போது நெகட்டிவ் விமர்சனம் கூடாது.
- போட்டி நடிகர்களின் படங்களை காலி செய்வது
- தனுஷ் மீதான பெண் பித்தன் பிரச்சனையை ஆரம்பத்தது
- விஜய் சேதுபதியை வளர விடாமல் தடுத்தது
- பிரதீப் ரங்கநாதனுக்கு வைக்கப்பட்டுள்ள குறி
தனுஷ் மீதான பெண் பித்தன் புகார்
சமீபத்திய காலமாக கோலிவுட்டில் எந்த நடிகருக்கோ, நடிகைக்கோ விவாகரத்து பிரச்னை வந்தாலே அதில் தனுஷின் பெயர் அடிப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் சிவகார்த்திகேயனின் ஆன்லைன் கூட்டம் என்று தான் கூறப்படுகிறது.
சம்மந்தமே இல்லாமல் தனுஷை குறிப்பிட்டு அசிங்கப்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் முடிவு. இதனால் இரண்டாம் கட்டத்தில் இருக்கும் தனுஷை எளிதாக இறக்கி தான் அந்த இடத்தில் வந்துவிடலாம் என்பது சிவகார்த்திகேயனின் எண்ணம்.
விஜய் சேதுபதியை காலி செய்தது
விஜய் சேதுபதியும், சிவகார்த்திகேயனின் வளார்ச்சியும் ஒரே நேரத்தில் தொடங்கியது. ஆனால் நிறைய வாய்ப்புகள் வந்தாலும் விஜய் சேதுபதியால் வளர முடியவில்லை. தொடர்ந்து அவர் படங்கள் நெகட்டிவ் விமர்சனத்தை குவித்து வசூல் அடி வாங்கியதும் இவருடைய வார் ரூம் வேலை எனச் சொல்லப்படுகிறது.
அடுத்த குறி பிரதீப் ரங்கநாதன்
கோமாளி படத்தின் இயக்குனராக வந்தாலும் நடிகராக தூள் கிளப்பி வருபவர் பிரதீப் ரங்கநாதன். அந்த வகையில் இந்த ஆண்டு அதிக வசூலை குவித்தது அவர் நடித்த டிராகன் திரைப்படம். 150 கோடி வரை வசூல் குவித்த நிலையில் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தின் மீது எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.
ஆனால் ஒரே பாசிட்டிவ் ட்வீட்கள் குவிந்தாலும் மதராஸி 100 கோடியை தொட முடியவில்லை. இதனால் இனி பிரதீப் ரங்கநாதனை குறித்து நிறைய சர்ச்சை வெளிவரும் என்றும் அதை எஸ்கே கூட்டம் சரியாக செய்யும் என்ற பேச்சும் எழுந்துள்ளது.
