சிவகார்த்திகேயனுக்கும், அந்த இயக்குனருக்கும் தர்ம அடி..?! எஸ்.ஜே.சூர்யாவை அறிமுகப்படுத்திய அஜித்!

தமிழ்த்திரை உலகில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக வெளியில் பலருக்கும் தெரியாது. அதே நேரம் பிரபல சினிமா விமர்சகர் வலைப்பேச்சு அந்தனன் சில தகவல்களை சொல்லி இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் சமீபத்தில் ஒரு பழக்கத்தை வைத்துள்ளார். யார் நல்ல படம் இயக்குகிறார்களோ அவர்கள் எதிர்காலத்தில் நல்லபடியாக வருவார்கள் என்று தெரிந்தால் அவரைக் கூப்பிட்டு பாராட்டி போட்டோ எடுத்துக் கொள்கிறார். அதுல ஒரு சுயநலமும் இருக்கு. இன்னும் நிறைய நல்ல படம் கொடுப்பார்கள்.

அவர்களிடம் நல்ல கதை இருந்தால் நாமும் நடிக்கலாம் என்ற எண்ணமும் இருக்கு. இது சினிமாவில் சகஜம். கட்டாயமாக இருக்கணும். ஆனால் அதற்கு இவர் என்ன பெரிய ரஜினியா கூப்பிட்டு பாராட்டுறாரேன்னு விமர்சனம் வந்தது. அதற்கு லவ் மேரேஜ் இயக்குனர் ஷண்முகப்பிரியன் ஒரு சேனலில் பதில் சொல்லி இருந்தார். இதை சிவகார்த்திகேயன் செய்ததால்தானே கேட்கிறீர்கள்...
சூர்யாவோ, தனுஷோ ஒரு வளர்ந்தும் வரும் இயக்குனர்களைக் கூப்பிட்டுப் பாராட்டினால் கேட்பீர்களா என்று கேட்டதற்கு சூர்யா ரசிகர்கள் அந்த இயக்குனரையும், சிவகார்த்திகேயனையும் அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. கூடவே தனுஷ் ரசிகர்களும் கூட சேர்ந்துட்டாங்க. இது கலவர பூமியா இருக்கு.

ஒரு இயக்குனரை அறிமுகப்படுத்துறது என்பதே பெரிய விஷயம். எஸ்.ஜே.சூர்யாவை எல்லாம் அஜித் தான் அறிமுகப்படுத்தினார். இயக்குனர் வசந்த், ஹரி, பாலா எல்லாம் சூட்டிங்ஸ்பாட்ல நடிகர்களை எல்லாம் கொடுமைப்படுத்துவாங்க. அப்படித்தான் வசந்துடன் ஏற்பட்ட முரண்பாடுல அவரைத் தூக்கிட்டு எஸ்.ஜே.சூர்யாவை அஜித் அறிமுகப்படுத்தினார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சினிமாவைப் பொருத்தவரை நல்லது செய்தாலும் திட்டுவதற்கு என்று 10 பேராவது இருக்கிறார்கள். ஒண்ணுமே செய்யாவிட்டாலும் இவன் எல்லாம் இருந்து எதுக்குன்னு சொல்வாங்க. படம் சரியில்லன்னா இயக்குனர்களைக் கூட திட்ட மாட்டாங்க. நடிகர்களைத் தான் திட்டுறாங்க. நல்ல கதையாக் கேட்டு நடிக்கத் தெரியாதா? இத்தனை வருஷமா பீல்டுல இருந்து எதுக்குன்னு சொல்வாங்க. ஆக சினிமா கனவுலகம்தானே தவிர நிறைய பணம் கொழிக்கும் இடம் தானே தவிர அதற்கேற்ப பல இடியாப்ப சிக்கல்கள் இங்கும் உண்டு என்பதை இந்த சம்பவங்கள் மூலம் உணர முடிகிறது.