சாப்பாட்டுக்கு வழி இல்லையா? சின்னத்திரை நடிகரிடம் சீரியல் வாய்ப்பு கேட்ட சிவகார்த்திகேயன்…
Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரை நடிகர் ஒருவரிடம் சீரியல் வாய்ப்பு கேட்டு அதற்கு அவர் மறுப்பு தெரிவித்த சுவாரசிய சம்பவம் குறித்து பேசி இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் உள்ளே வந்தவர் சிவகார்த்திகேயன். அந்நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் செய்த பெர்பாமென்ஸ்கள் இன்று வரை ரசிகர்களிடம் பிரபலம் என்றே சொல்லலாம். பின்னர் விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளராகவும் இருந்தார்.
இதைத் தொடர்ந்து சீரியல் நடிகர் தீபக்கிடம் நடிகர் சிவகார்த்திகேயன் சீரியல் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என கேட்டிருக்கிறார். அதற்கு தீபக் ஏன் தம்பி உனக்கு சாப்பாட்டுக்கு கஷ்டமா என கேட்டிருக்கிறார். அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை அண்ணா. நிகழ்ச்சி முடிந்து விட்டது அதனால் தான் சீரியல் முயற்சி செய்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.
அப்போதெல்லாம் சீரியலில் உடனே ஹீரோ வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள். சின்ன சின்ன ரோல் செய்து ஹீரோவாக வருவதற்கே 10 ஆண்டுகள் கூட எடுக்கும். அப்பொழுது நான் சம்பளமும் உயர்த்தி தருவார்கள். நீ சினிமாவில் நடிக்க முயற்சி செய்யலாமே எனக் கூறியிருக்கிறார்.
ஆனால் இதை முதலில் கேட்ட சிவ கார்த்திகேயனுக்கு அதிருப்திதான் நிலவியதாம். இருந்தும் அவர் தீபக்கிடம் தொடர்ந்து சீரியல் வாய்ப்பு கேட்டுக் கொண்டிருக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட சில இயக்குனர்களை நேரில் சந்திக்க அப்பாயின்மென்ட் வாங்கி கொடுத்திருக்கிறார்.
அங்கு சென்று சந்தித்து போட்டோக்களை கொடுத்து வந்தோம் சிவகார்த்திகேயனுக்கு எந்த சீரியல் வாய்ப்பும் வரவில்லையாம். இந்த சூழலில் தான் அவர் இரண்டு படங்களை நடித்து முடித்து இருக்கிறார். ஒரு நிகழ்ச்சியின் தீபக் மற்றும் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு இருக்கின்றனர்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய எஸ் கே தான் சின்னத்திரை வாய்ப்பு கேட்டு அதற்கு தீபக் சொன்ன விஷயத்தையும் கூறியிருக்கிறார். முதலில் அது எனக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. பின்னர் அவர் சொன்னதன் உண்மை புரிந்து கொண்டதால் தான் இங்கு இருப்பதாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தாராம்.