ஒரே நேரத்தில் 2 படம்!.. ஒன்னாவது ஹிட் ஆகணும்!.. சிவகார்த்திகேயன் எடுக்கும் ரிஸ்க்!…

அமரன் திரைப்படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை மேலும் உயர்த்தி இருக்கிறது. இதனால் 60 முதல் 70 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக அவர் மாறினார். ஆனால் அந்த படம் ஓடியதற்கு காரணமே சாய் பல்லவி என்பது ரசிகர்களுக்கு தெரியும். ஆனால் அமரன் படத்தில் வெற்றியை தனது வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொண்டே சிவகார்த்திகேயன் பல இயக்கனர்களிடமும் கதை கேட்டார்.
குட் நைட் பட இயக்குனர் வினாயக் சந்திரசேகர், டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு என மூன்று பேரிடமும் கதை கேட்டு எல்லோரிடமும் ‘நாம சேர்ந்து படம் பண்ணுவோம்’ என நம்பிக்கை கொடுத்தார். ஒருபக்கம் ‘இனிமே நாம பெரிய ஹீரோ’ என நினைத்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி, சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி ஆகிய படங்களிலும் நடித்தார். அதில் மதராஸி வெளியாகிவிட்டது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பராசக்தி திரைப்படம் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இருக்கிறது. இந்த படம் 2026 ஜனவரி 14ஆம் தேதி வெளியாகியுள்ளது.
ஒருபக்கம், சிபி சக்கரவர்த்தியுடன் சிவகார்த்திகேயனுக்கு கருத்து மோதல் ஏற்பட ‘இந்த படம் வேண்டாம்’ என சொல்லிவிட்டு தெலுங்குக்கு சென்று நானியை வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் சிபி ஈடுபட்டார். எனவே வினாயக்கை அழைத்து ‘படத்தை துவங்கலாம்’ என சிவகார்த்திகேயன் கூறினார். ஆனால், அந்த படத்திற்கு பைனான்ஸ் செய்ய ஒப்புக் கொண்டிருந்த பைனான்சியர் ‘சிபி சக்ரவர்த்தி இயக்குனர் என்றால் மட்டுமே நான் பணம் கொடுப்பேன்’ என சொல்லிவிட மீண்டும் சிபியிடம் பேசி அழைத்து வந்தார்கள். ஒரு பக்கம் வெங்கட் பிரபுவும் ‘நான் எவ்வளவு நாட்கள்தான் காத்திருப்பது’ என சொல்ல ‘உங்கள் படத்திலும் நடிக்கிறேன்’ என சிவகார்த்திகேயன் சொல்லிவிட்டார்.
தற்போது இரண்டு படத்தின் வேலைகளும் வேகமாக நடந்து வருகிறது. இரண்டு படத்திற்கும் கதை விவாதங்கள் நடந்து வருகிறது. நேற்று ஊடகம் ஒன்றில் பேசிய வெங்கட் பிரபு ‘படத்திற்கான வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. அநேகமாக வருகிற டிசம்பர் அல்லது ஜனவரி படத்தின் ஷூட்டிங் துவங்கும். இந்த படம் வித்தியாசமாக இருக்கும்’ என சொல்லிவிட்டார்.
அதேபோல் பராசக்தி படம் முடிந்தவுடன் சிபி சக்கரவர்த்தி படத்தின் வேலைகளும் துவங்குகிறது. எனவே ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் மாறி மாறி நடிக்க சிவகார்த்திகேயன் திட்டமிட்டிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் முழு கவனம் செலுத்தி நடித்தாலே அந்த படம் ஓடாது. இதில் இரண்டு படங்களில் நடித்தால் என்னாகுமோ?’ என ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் நக்கலடித்து வருகிறார்கள்.