மழையால் பாதிக்கப்பட்ட மக்கள்!. உதவி செய்த எஸ்.கே.!.. மற்ற நடிகர்கள் சைலண்ட் மோடில்!...

by Murugan |
sivakarthikeyan
X

Sivakarthikeyan: தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மழை வெள்ளம், நிலச்சரிவு, நிலநடுக்கும், புயலால் பாதிப்பு போன்ற இயற்கை பேரிடர்களால் மக்கள் பாதிக்கப்படுவது என்பது அவ்வப்போது நடந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் வயநாட்டில் மழையால் மண் சரிந்து பல பேர் மரணமடைந்தனர்.

அதேபோல், சில மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலி, தூத்துக்குடி மாட்டங்களிலும் அதிக மழை பெய்து மக்கள் அவதிப்பட்டனர். வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழ்நிலையும் ஏற்பட்டது. அதேபோல், சமீபத்தில் பெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை போன்ற பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலையில் சிறுவர். சிறுமி உட்பட ஒரு குடும்பத்தை சேர்ந்த 7 பேர் மண்ணில் புதைந்து போனார்கள். பல நூறு ஏக்கர் விளைநிலங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அந்த பகுதிகளுக்கு அரசியல்வாதிகள் சென்றார்கள். பல இடங்களில் தங்களுக்கு சரியான உதவிகள் செய்து தரப்படைவில்லை, குடிநீர் கூட கொடுக்கப்படவில்லை என மக்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தும் அளவுக்கு சென்றார்கள்.

பொதுவாக இது போன்ற இயற்கை பேரிடர்களில் மக்கள் பாதிக்கப்படும்போது அரசு தரப்பில் மத்திய அரசிடம் நிதி கேட்பார்கள். இந்த முறை தமிழக அரசு 2 ஆயிரம் கோடி கேட்டிருக்கிறது. ஒருபக்கம், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது திரையுலகில் இருந்து நடிகர்கள் நிதி வழங்குவார்கள்.

sivakarthikeyan

ஆனால், இந்த முறை எந்த நடிகருக்கும் அரசுக்கு நிதி கொடுக்கவில்லை. இதில், சிவகார்த்திகேயன் மட்டும் துணை முதல்வர் உதயநிதியிடம் 10 லட்சம் நிதியுதவி அளித்திருக்கிறார். விஜய் சென்னை மக்களுக்கு உதவி செய்தார். இவர்கள் இருவரை தவிர மற்ற நடிகர்கள் எந்த உதவியும் செய்யவில்லை. நிதியுதவியும் அளிக்கவில்லை.

ஒருபக்கம் குக் வித் கோமாளி புகழ் பாலா தன்னால் முடிந்த உதவிகளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Next Story