Sivakarthikeyan: அப்படியே விஜய் மாதிரிதான் இருக்கு! பெங்களூரில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன்
Sivakarthikeyan: தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி படம் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ருக்மணி வசந்த் ஆகியோர் நடிப்பில் படம் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றன. ஒரு ஃபுல் பவர் பேக் ஆக்ஷன் படமாக மதராஸி படம் தயாராகியிருக்கிறது. டிரெய்லர் ரிலீஸுக்கு முன்பு வரை படத்தின் மீது எந்தவொரு ஹைப்பும் இல்லாமல் இருந்தன.
ஆனால் டிரெய்லர் வெளியீட்டிற்கு பிறகுதான் ரசிகர்கள் படத்தை பற்றி பேசி வருகின்றனர். இன்னொரு பக்கம் முருகதாஸும் படத்தை புரமோட் செய்யும் பட்சத்தில் பல பேட்டிகளில் பேசி வருகிறார். சிவகார்த்திகேயனும் புரமோஷன் வேலையில் படு தீவிரமாக இறங்கிவிட்டார். பெங்களூருக்கு பட புரமோஷனுக்காக சென்ற சிவகார்த்திகேயன் படத்தை பற்றி அவருடைய கருத்துக்களை கூறினார்.
அதோடு சலம்பல பாடலுக்கும் மேடையில் நடனம் ஆடி மாஸ் காட்டினார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. பெங்களூரில் ரசிகர்களுடன் இருக்கும் மாதிரியான புகைப்படம் அது. பெங்களூரில் உள்ள ஒரு மாலில்தான் பட புரோமோஷன் நடைபெற்றது. அதனால் சிவகார்த்திகேயனை பார்க்க மாலில் வருகை புரிந்த அனைவரும் சிவகார்த்திகேயனை சூழ்ந்து விட்டனர்.
கூட்டத்தின் நடுவே சிவகார்த்திகேயனின் முகம் மட்டும் பூரிப்பில் இருப்பதை போல் தெரிகிறார். இந்த புகைப்படத்தை டேக் செய்து நெட்டிசன்கள் அடுத்த விஜய் நான் தான் என்பதை போல் சிவகார்த்திகேயன் கெத்து காட்டி வருகிறாரே என்று பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது சமீபகால படங்களில் அதாவது மெர்சல் மாதிரியான படங்களில் இப்படித்தான் விஜய் கூட்டத்தின் நடுவே கை காட்டுவது போல் காட்சி அளிப்பார்.
அதே மாதிரியான புகைப்படம் போலத்தான் இதுவும் தெரிகிறது. ஏற்கனவே அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் தான் என கூறும் போது அண்ணன் அண்ணன் தான் தம்பி தம்பிதான் என சிவகார்த்திகேயன் பதிலளித்தார். ஆனால் அவருடைய நடவடிக்கைகளை பார்க்கும் போது விஜய் இடத்தைப் புடித்து விடுவார் என்பதை போலத்தான் தெரிகிறது.
