சூர்யாவா? SKவா? இதுதான் லைஃப் டைம் செட்டில்மெண்ட்.. யாருமே இத எதிர்பார்க்கல
Sivakarthikeyan: தற்போது விஜய் அரசியலில் முழு நேரம் கவனம் செலுத்தி வருவதால் ஜனநாயகன் படம்தான் அவருக்கு கடைசி படம். அதனால் சிவகார்த்திகேயன் தான் அடுத்த தளபதி என அனைவரும் கூறி வருகிறார்கள். சமீபத்தில் நடந்த மதராஸி பட இசை வெளியீட்டு விழாவில் கூட இதை பற்றி சிவகார்த்திகேயன் பேசும் போது அடுத்த தளபதி நான் தான் என நினைத்திருந்தால் கண்டிப்பாக விஜய் சார் கோட் படத்தில் அந்த துப்பாக்கியை கொடுத்திருக்க மாட்டார்.
எப்போதும் அவர் அண்ணண் அண்ணன் தான். நான் தம்பி தம்பிதான் என பேசியிருந்தார். இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறும் போது மார்கெட் மற்றும் சம்பளத்தில் சூர்யாவை விட சிவகார்த்திகேயன் தான் முன்னிலையில் இருக்கிறார் என்றும் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ரெட்ரோ மற்றும் கங்குவா போன்ற படங்களின் ஓடிடி கூட இன்னும் சரியாக விற்கவில்லை என்றும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
ஏன் கருப்பு படத்திற்கும் எதிர்பார்த்த வியாபாரமும் நடக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு மத்தியில் மதராஸி பட விழாவில் சிவகார்த்திகேயன் ஒரு விஷயம் சொன்னார். அதாவது 14 வருடங்களுக்கு முன்பு ஒரு கால் வந்தது. சூர்யா சாரின் ஏழாம் அறிவு படத்தின் இசை வெளியீட்டு விழாவை நீங்கள்தான் தொகுத்து வழங்க வேண்டும் என சொன்னார்கள். எனக்கு ஒரே குஷி. எவ்வளவு பெரிய படம்? அதுக்கு நாம் ஆங்கரா? என உற்சாகத்தில் இருந்தேன்.
இரண்டு நாளுக்குபிறகு இன்னொரு கால். சாரி.. அந்த விழாவை ஒரு பெரிய நடிகர் தொகுத்து வழங்குகிறார். நீங்கள் வேண்டுமென்றால் ஸ்கிரிப்ட் பார்த்துக்கோங்க என சொன்னார்கள். எப்படி இருந்தாலும் ஓகே என அந்த பெரிய நடிகர் வேறு யாருமில்லை. ஜெய்தான் தொகுத்து வழங்கினார். அவருக்கு பின்னாடி இருந்து நெக்ஸ்ட், நெக்ஸ்ட் என நான் சொல்லிக் கொண்டே இருந்தேன்.
அதே சமயம் பின்னாடி இருந்து மேடைக்கு கீழே அமர்ந்திருந்தா சூர்யா சார், முருகதாஸ் சார், உதய நிதி என எல்லாரையும் பார்த்து கொண்டிருந்தேன் என சிவகார்த்திகேயன் அவருடைய அந்த பிளாஷ்பேக்கை கூறினார். அந்த நேரத்தில் சூர்யா பட விழாவில் ஸ்கிரிப்ட் ரைட்டராக இருந்த சிவகார்த்திகேயன் இன்று அதே சூர்யாவை பின்னுக்கு தள்ளி மார்கெட்டில் முன்னிலையில் இருக்கிறார் என்றால் இது அசுர வளர்ச்சிதான் என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.
