ராகவா லாரன்ஸின் பென்ஸ்!.. புரமோஷன் பண்ற சீஃப் கெஸ்ட் யாருன்னு பாருங்க!.. இதுதான் வளர்ச்சி!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் பென்ஸ் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயனுடன் எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
ஜி ஸ்குவாட் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகி வருகிறது பென்ஸ் திரைப்படம். சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ள இப்படத்தில் நிவின் பாலி, மாதவன், ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
படத்தின் கதை லோகேஷ் கனகராஜால் எழுதப்பட்டது, இவர் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் உள்ளன. லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் (LCU) தொடரில் இணைந்த இத்திரைப்படம் விக்ரம், கைதி, லியோவை தொடர்ந்து நான்காவது படமாக உருவாகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும், எ.ஆர் முருகதாஸ் இயக்கி வருகிற மதராஸி படத்திலும் நடித்து வருகிறார். அமரன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நாட்டுப்பற்று படமாக நடித்து வருகிறார் சிவகார்த்திக்கேயன்.
முனி, காஞ்சனா என பல பாகங்களில் தொடர்ந்து நடித்து வரும் ராகவா லாரன்ஸ் அதிகாரம், காஞ்சனா 4 மற்றும் கால பைரவா என்று பல படங்களிலும் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் பென்ஸ் படத்தின் படப்பிடிபின் போது சிவகார்த்திக்கேயன் ராகவா லாரன்ஸ் மற்றும் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணனுடன் எடுத்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் சிவகார்த்திக்கேயனின் ரெமோ படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் 2016ம் ஆண்டு ரெமோ வெளியானது. அவ்வை சண்முகி மற்றும் காதல் மன்னன் படங்களை உல்டா செய்து பாக்கியராஜ் கண்ணன் இயக்கியதாக ட்ரோல் செய்யப்பட்டது. அதன் பின்னர், 2021ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தையும் இயக்கினார். அதன் பின்னர் 4 ஆண்டுகள் கழித்து பென்ஸ் படத்தை இயக்கி வருகிறார்.