வேணும்னே பண்ண மாதிரில்ல இருக்கு.. பராசக்தி டைட்டில்.. விஜய் ஆண்டனிக்கா? இல்ல எஸ்கேவுக்கா?..

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பெரிய திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகின்றார் நடிகர் சிவகார்த்திகேயன். இதற்கெல்லாம் காரணம் அமரன் திரைப்படம் கொடுத்த வெற்றிதான். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. பாக்ஸ் ஆபிஸில் கிட்டத்தட்ட 360 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.
சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களிலேயே அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்கின்ற பெயரை இப்படம் பெற்றது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் கமிட்டான திரைப்படம் எஸ்கே 23 இந்த திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வருகின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்து விட்டது. அடுத்த மாதம் 20 ஆம் தேதியுடன் படப்பிடிப்பு முடிய இருப்பதாக கூறப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் எஸ்கே 24 என்கின்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். ஆனால் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு தற்போது வரை வெளியாகவில்லை. அதற்கு முன்னதாக சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்கே 25 திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
அதனைத் தொடர்ந்து இன்று மாலை படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இருக்கின்றது. இந்த திரைப்படத்திற்கு பராசக்தி என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு முன்னதாக அதாவது இன்று காலை நடிகர் விஜய் ஆண்டனி தான் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு தமிழில் சக்தி திருமகன் என்கின்ற டைட்டிலை வைத்திருக்கின்றார். ஆனால் அதுவே தெலுங்கில் இந்த திரைப்படத்திற்கு பராசக்தி என்று பெயரிடப்பட்டிருக்கின்றது.
இந்த செய்தி காலை முதலே இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஆனால் தற்போது இதில் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. அது என்னவென்றால் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது படமான பராசக்தி படத்திற்கான டைட்டிலை முறைப்படி என்ஓசி வாங்கியிருக்கிறார்கள். அதாவது முதலில் பிரபு அவர்களின் குடும்பத்திடம் அனுமதி வாங்கி அதன்பிறகு பராசக்தி திரைப்படத்தை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்தும் என்ஓசி லெட்டர் பெறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கலைஞர் குடும்பத்தினரிடமும் டைட்டிலைட் வைப்பதற்கான உரிய அனுமதி பெறப்பட்டு அதன் பிறகு படத்திற்கு பராசக்தி என்கின்ற டைட்டிலை வைத்திருக்கிறார்கள். ஆனால் இது எதுவுமே தெரியாமல் விஜய் ஆண்டனி படக்குழுவினர் இப்படி ஒரு டைட்டிலை வெளியிட்டு இருப்பது எப்படி சரியாக இருக்கும். மேலும் தமிழில் சக்தி திருமகன் என்று டைட்டில் வைத்திருந்தாலும் தெலுங்கில் பராசக்தி என்று தான் வைக்கப்பட்டிருக்கின்றது.
அதுவே சிவகார்த்திகேயனின் 25வது படத்திற்கும் பராசக்தி என டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ், தெலுங்கு என எந்த மொழியாக இருந்தாலும் அங்கும் இதே டைட்டில் தான் இருக்கும் பட்சத்தில் எப்படி சாத்தியமாகும். தெலுங்கில் இந்த திரைப்படத்தை எடுத்துச் செல்லும்போது யார் முறைப்படி என்ஓசி வாங்கி வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு தான் அந்த டைட்டில் சொந்தமாக இருக்கும்.
இது தெரியாமல் வேண்டுமென்றே வம்பிழுக்கும் விதமாக விஜய் ஆண்டனி இப்படி செய்திருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் இன்று காலை வெளியான டீசரிலும் சுதா கொங்கரா படத்தை வம்பு இழுக்கும் விதமாக சில வசனங்கள் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகின்றது.